திவாலானது மாலத்தீவு.. சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை வைத்த மாலத்தீவு அரசு..

இந்திய அரசை விமர்சித்ததை தொடர்ந்து, மாலத்தீவு புறக்கணிக்கப்பட்ட நிலையில் மாலத்தீவு சர்வதேச நாணய நிதியத்திடம் திவாலானதாக அறிவித்துள்ளது.

Maldives has reportedly declared bankruptcy with IMF and has asked for a bailout package-rag

இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் நிலவி வருகிறது. பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் கூறிய சில சர்ச்சை கருத்துகளே இந்த மோதலுக்கு காரணமாகும். வரும் மார்ச் 15ஆம் தேதிக்குள் இந்திய அரசு மாலத்தீவில் ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் முகமட் முய்சு கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மாலத்தீவு அதிபர் தரப்பில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நடந்த மாலத்தீவு தேர்தல் பிரச்சாரத்தின் போதே முய்சு, இந்தியாவுடனான உறவுகளை குறைப்பேன் என்றும் சீனாவுடனான உறவை மேம்படுத்துவேன் என்றும் கூறியிருந்தார்.

அப்போதே அவர் மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவத்தையும் வெளியேற்றுவேன் என்பதை முன்வைத்து இந்தியா அவுட் என் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றார். தொடர்ந்து அதிபராகத் தேர்வான பிறகு அவர் கடந்த நவ. மாதம் இந்தியா தனது வீரர்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்தார்.

பிரதமர் மோடி, தனது லட்சத்தீவு பயணத்தைக் குறிப்பிட்டு ”லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அங்கு வாழும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னும் பிரமிப்பில் இருக்கிறேன். அகத்தி, பங்காராம், கரவட்டி ஆகிய இடங்களில் மக்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்காக நன்றி கூறுகிறேன்” என தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

பிரதமரின் இந்தக் கருத்துக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் தங்கள் சமூகவலைத்தளப் பக்கத்தில் சில கருத்துக்களை முன்வைத்தனர். குறிப்பாக, இந்தியா மாலத்தீவைக் குறிவைக்கிறது என்றும், மாலத்தீவு கடற்கரை சுற்றுலாத்தலத்துடன் போட்டியிடுவதில் இந்தியா பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது எனக் குற்றம் சாட்டியிருந்தனர்.

இது இந்தியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், பலரும் மாலத்தீவுக்கு எதிரான பிரச்சாரங்களைச் சமூக வலைதளங்களில் முன்வைத்தனர். மாலத்தீவுக்கு மாற்றான சுற்றுலாத்தலமாக லட்சத்தீவைக் குறிப்பிட்டனர். இதனால், பலர் தங்களின் மாலத்தீவு பயணத்தையும் ரத்து செய்தனர்.

இந்த நிலையில், இந்திய சுற்றுலா பயணிகள் வருகை மாலத்தீவில் கடுமையாக சரிந்துள்ளது. மாலத்தீவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பட்டியலில் முதலிடத்தில் ரஷ்யாவும், 2-வது இடத்தில் இத்தாலியும், 3-வது இடத்தில் சீனாவும், 4-வது இடத்தில் பிரிட்டனும், 5-வது இடத்தில் இந்தியாவும் உள்ளன.

இந்த நிலையில் மாலத்தீவு சர்வதேச நாணய நிதியத்திடம் திவாலானதாக அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் பிரதமர் மோடியுடனான உறவுகள் சீர்குலைந்ததையடுத்து, மாலத்தீவு பெரும் நெருக்கடியில் உள்ளது.  இன்று மாலத்தீவு சர்வதேச நாணய நிதியத்திடம் தங்களது நாடு திவாலாகிவிட்டதாக அறிவித்து, பிணை எடுப்பு (Bailout) கோரியுள்ளது.

குறைந்த விலையில் சிம்லா, குலு மணாலி செல்ல அருமையான டூர் பேக்கேஜ்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios