Asianet News TamilAsianet News Tamil

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியது திட்டமிட்ட சதி... 1,204 பேர் கைது..!

வங்காளதேசம் முழுவதும் கிட்டத்தட்ட 32,000 துர்கா பூஜைகள் நடைபெற்றதாகவும், சில மட்டுமே தாக்கப்பட்டதாகவும் வங்கதேச அமைச்சர் மஹ்மூத் கூறினார்

Attack on Hindus in Bangladesh is a planned conspiracy ... 1,204 people arrested
Author
Bangladesh, First Published Oct 29, 2021, 6:38 PM IST

வங்கதேசத்தில் துர்கா பூஜையின்போது இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது திட்டமிட்ட சதி. சிறுபான்மையினரை வேருடன் அகற்ற வேண்டும் என்பதற்கான திட்டம் என ஆர்எஸ்எஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.Attack on Hindus in Bangladesh is a planned conspiracy ... 1,204 people arrested

இதையும் படியுங்கள்:- ஜூலை 18 தான் தமிழ்நாடு நாள்… புள்ளி விவரத்துடன் விளக்கமளிக்கும் திராவிடத் தலைவர்கள்!!

’’வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் சில அட்டூழியங்கள் நடந்துள்ளன. எங்கள் அரசாங்கம் அனைத்து குற்றவாளிகளுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவங்களுக்காக இதுவரை 129 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1,204 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இடிக்கப்பட்ட அனைத்து வீடுகளும், குறிப்பாக ரங்பூரில், மீண்டும் கட்டப்பட்டுள்ளன. கோவில்களை பழுதுபார்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு வங்காளதேசம் முழுவதும் கிட்டத்தட்ட 32,000 துர்கா பூஜைகள் நடைபெற்றதாகவும், சில மட்டுமே தாக்கப்பட்டதாகவும் வங்கதேச அமைச்சர் மஹ்மூத் கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்து இந்திய அரசுத் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது, மதச்சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி, வங்கதேச அரசிடம் இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து வங்கதேசத்தில் உள்ள மதச்சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று பிரதமர் ஷேக் ஹசினா உறுதியளித்தார்.Attack on Hindus in Bangladesh is a planned conspiracy ... 1,204 people arrested

இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரதிய காரியகாரி மண்டல் பைதக் கூட்டம் கர்நாடகாவில் தார்வாட்டில் கடந்த 3 நாட்களாக நடந்தது. இந்தக் கூட்டத்தின் இறுதியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மானம் குறித்து இணைப் பொதுச்செயலாளர் அருண் குமார் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது,“வங்கதேசத்தில் துர்கா பூஜையின்போது இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சிறுபான்மையாக இருக்கும் இந்துக்களை வேருடன் அகற்றப் போடப்பட்ட திட்டமிட்ட சதிச் செயல். அண்டை நாடான வங்கதேசத்தை அழைத்து இந்திய அரசு தனது கண்டனத்தையும், உலக அளவில் இருக்கும் இந்து சமூகத்தின் கவலையையும், வருத்தத்தையும் தெரிவிக்க வேண்டும். வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைத் தடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:- விபூதியடித்து, தோரணம் கட்டி, கதவில் பெரியார் சிலை... மரியாதையா..? அவமானமா..?

இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய தண்டனையை வங்கதேச அரசு வழங்க வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். இந்தத் தாக்குதலின் நோக்கமே வங்கதேசத்தில் பொய்யான செய்தியைப் பரப்பி இரு மதங்களுக்கு இடையே மோதலை உருவாக்குவதுதான்.

மத்திய அரசு அனைத்து ராஜாங்க ரீதியான வழிகளிலும் வங்கதேசத்துடன் தொடர்பு கொண்டு இந்துக்கள், பவுத்தர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை, உலக மனித உரிமை அமைப்புகள், இரட்டை நிலைப்பாட்டுடன் இருக்காமல், மவுனம் கலைத்து இந்தத் தாக்குதலைக் கண்டிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:- டி.டி.வி.தினகரன் இல்ல திருமண விழாவில் ஓ.பி.எஸ் குடும்பத்தாரால் பரபரப்பு... அதிமுக நிர்வாகிகள் செம ஷாக்..!ம் படியுங்கள்:-

வங்கத்தில் உள்ள மதச் சிறுபான்மையினர்களான இந்துக்கள், பவுத்தர்கள் உள்ளிட்டோர் கவுரவத்துடனும், அமைதியுடன் வாழ்வதற்கு உதவ வேண்டும்'' என அவர் தெரிவித்தார். 

முன்னதாக, நாட்டில் வகுப்புவாத பதட்டத்தைத் தூண்டுவதற்கு எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (பிஎன்பி) மற்றும் ஜமாத் உள்ளிட்டவை பொறுப்பு என்று பங்களாதேஷ் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் எம் ஹசன் மஹ்மூத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios