டி.டி.வி.தினகரன் இல்ல திருமண விழாவில் ஓ.பி.எஸ் குடும்பத்தாரால் பரபரப்பு... அதிமுக நிர்வாகிகள் செம ஷாக்..!
சசிகலா குறித்து ஓ.பி.எஸ் கருத்து தெரிவித்துள்ளது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
சசிகலா குறித்து ஓ.பி.எஸ் கருத்து தெரிவித்துள்ளது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் அதிமுக நிர்வாகிகள் இருவேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சசிகலாவை ஒருபோதும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள மாட்டோம். அவர் சட்டப்படி அதிமுகவில் இணைய முடியாது. இரட்டை இலை சின்னம் எங்களிடம் தான் உள்ளது. சசிகலா வெற்றுக் கூச்சல் போட வேண்டாம். சூரியனை பார்த்து...’’ என்கிற வார்த்தைகளை உதிர்த்து தனது எதிர்ப்பை காட்டினார் எடப்பாடி பழனிசாமி.
இந்நிலையில், ‘’அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களை ஏற்றுக் கொள்வது என்பது மக்களின் விருப்பம். அவரை அ.தி.மு.கவில் இணைப்பது தொடர்பாக தலைமைக் கழக நிர்வாகிகள் பேசி முடிவு செய்வார்கள். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தொடங்கிய இந்த இயக்கம் தொண்டர்களுக்காகவே இன்றளவும் செயல்பட்டு வருகிறது. மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் கட்சி செயல்பட்டு வருகிறது’’ என்றார் ஓ.பி.எஸ்," என்றார்.
மேலும், "அண்ணா வகுத்துக் கொடுத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்றவைதான் அ.தி.மு.கவின் அடிப்படைக் கொள்கை. அரசியல் இயக்கத்துக்குத் தலைமை தாங்கியிருப்பவர்கள், பிறரை அரசியல்ரீதியாக விமர்சிக்கும்போது கண்ணியமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். அது தொண்டனாக இருந்தாலும் சரி, தலைவராக இருந்தாலும் சரி," என்றார். இந்த வார்த்தைகள் எடப்பாடி பழனிசாமியை நோக்கிக் கூறப்பட்டவையாக பார்க்கப்படுகின்றன.
சசிகலாவுக்கு ஆதரவாக பன்னீர்செல்வம் பேசிய வார்த்தைகள், அ.தி.மு.கவின் மற்றொரு பிரிவினர் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியவர் ஓ.பி.எஸ் என்பதை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்," என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார். தொடர்ந்து, அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியும், `இதனை சாதிக் கட்சியாக மாற்ற விட மாட்டோம்,' என்றார்.
இந்நிலையில், தென் மாவட்டங்களில் அரசியல் சுற்றுப்பயணத்தை சசிகலா மேற்கொண்டுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் செவ்வாய் கிழமையன்று கிளம்பிய சசிகலாவுடன் இளவரசியும் பயணம் செய்ய உள்ளார். இன்று தஞ்சையில் டி.டி.வி.தினகரன் மகளின் திருமண வரவேற்பில் பங்கேற்கிறார்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், திருத்துறை பூண்டியில் டி.டி.வி.தினகரன் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸின் தம்பி ஓ.ராஜா பங்கேற்றது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சசிகலா விவகாரம் உச்சத்தில் இருக்கும் நிலையில் ஓ.பி.ராஜா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது பல்வேறு வியூகங்களை கிளப்பி உள்ளது.