பெரியாருக்கு பொது இடங்கள், கோயில்களுக்கு எதிர்ப்புறம் சிலைகள் வைப்பது வழக்கம். கோயில்களுக்கு முன் பெரியாருக்கு சிலை வைப்பது ஆத்திகத்தை எதிர்ப்பதற்காக. 

பெரியாருக்கு பொது இடங்கள், கோயில்களுக்கு எதிர்ப்புறம் சிலைகள் வைப்பது வழக்கம். கோயில்களுக்கு முன் பெரியாருக்கு சிலை வைப்பது ஆத்திகத்தை எதிர்ப்பதற்காக. 

தவிர, வீடுகளில் உள்ள கதவுகளில் சரஸ்வதி, பிள்ளையார் உள்ளிட்ட சில கடவுளின் உருவங்கள் பதிக்கப்பட்டு இருக்கும். ஆனால், மாறாக ஒரு வீட்டின் கதவில் பெரியார் படம் பொறிக்கப்பட்டு அதன் கீழ் மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்கிற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இந்தக் கதவின் நிலையில் விபூதி பட்டை பூசப்பட்டுள்ளது. மாவிலை தோரணமும் கட்டப்பட்டு மாலையும் தொங்கவிடப்பட்டுள்ளது.

 இந்தப்படம் தான் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெரியாரியவாதி எப்படி விபூதி அடித்திருப்பார், தோரணம் கட்டியிருப்பார் என ஒரு சாரரும், தெய்வ நம்பிக்கை உள்ள ஒருவர் எப்படி தம் வீட்டுக்கதவில் பெரியார் படத்தை பொறித்திருப்பார்? என மறு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர்.

பெரியார் சொல்லிக் கொடுத்த பகுத்தறிவு இதுதானா? பெரியாருக்கு 100 கோடியில் சிலை வைத்தால் சாதி ஒழிந்து சமத்துவம் வந்து விடுமா? ஆரிய மேலாண்மை அழிந்து விடுமா? இப்படியே போனால் பெரியாருக்கு கோயில் கட்டி சிலை வழிபாடு செய்தாலும் வியப்பில்லை என ஒரு சாரார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கதவு சிலை ஒருபுறமிருக்கட்டும். 

பெரியார் தான் உருவ வழிபாட்டுக்கு எதிரானவராயிற்றே. பிறகு அவருக்கு மட்டும் எதற்கு சிலை? என்றொரு கிண்டலான கேள்விகள் திடீரென முளைத்திருக்கிறது. ’’பெரியார் உருவ வழிபாட்டுக்கு எதிரானவர் தான். தனிநபர் வழிபாடு கூடாது என்றவர்தான். சிலைகள் வைக்கப்படக்கூடாது என வாதிட்டவர்தான். உருவ வழிபாடு என்பது வேறு. தலைவர்களின் உருவத்தை பெரும் சிலையாக நிறுவி எதிர்வரும் சந்ததியினருக்கு பாடமாக படிப்பினையாக எடுத்துக்காட்டாக வைத்து மரியாதை செய்வது என்பது வேறு.

சென்னையில் கூட ஆங்கிலேயர் காலத்தில் அப்படி நிறுவப்பட்ட மன்றோ, ஜார்ஜ் மன்னர் போன்றோரின் சிலைகள் இப்போதும் இருக்கின்றன. அவற்றை பார்க்கும் இளம் தலைமுறையினர் அவர்களை பற்றி அறிய ஆவல் கொண்டு தேடி படிக்க துவங்குகின்றனர். எனவே உருவ வழிபாடு தான் தவறே தவிர, தலைவர்களுக்கு உருவச்சிலை அமைத்து மரியாதை செய்வதில் தவறில்லை. இது போன்ற தர்க்கங்களை எல்லாம் கருணாநிதி எடுத்து வைத்து பெரியாரையே சம்மதிக்க வைத்து அவரும் மகிழ்ச்சியாக தன் சிலை திறப்புவிழாவிலே கலந்து கொண்டார் என்பது வரலாறு.

எனவே சிலைகளுக்கு எதிரானவர் பெரியார் என்பது தவறான வாதம். சிலைகளை வழிபடுவதற்கு மட்டுமே எதிரானவர் என்பதை புரிந்துகொள்வது நலம்’’என்கிறார்கள் பெரியாரிஸ்டுகள். அது வெறும் சிலை தானே? அதை ஏன் நீக்கவேண்டும்? அதை நீக்குவதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு? இரண்டுக்குமான பதில் ஒன்று தான்.

பெரியார் சிலையை பார்ப்பவர்கள் அவரைப்பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். அவரது வாழ்க்கை, அவரது சிந்தனை, அவரது போராட்டம், அவர் அப்படி போராட நேர்ந்த சூழல், அப்போதைய காலகட்டத்தின் அடக்குமுறை, சமூக ஏற்ற தாழ்வுகள், அவரது கொள்கைகள், அவரது கருத்து வீச்சுக்கள் என பலவற்றை படித்து புரிந்து கொள்ள முயல்வார்கள்