இலங்கையின் புதிய அதிபராக இடது சாரி தலைவர் அனுர குமார திசநாயகே!
Sri Lanka New President : இலங்கையின் புதிய அதிபராக இடது சாரி தலைவர் அனுர குமார திசநாயகே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி கட்சியை சேர்ந்த 55 வயதான அனுர குமார திசநாயகே அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் சுமார் 42.31 சதவிகித வாக்குகளைப் பெற்று இலங்கையின் புதிய அதிபராக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி.. இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயகே வெற்றி பெற்றுள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் அவர் சுமார் 42.31 சதவீத வாக்குகள் பெற்று அதிபராக வெற்றி பெற்றுள்ளார். இடதுசாரி கூட்டணியான மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் (ஜே.வி.பி) 55 வயதான அனுர குமார வெற்றி பெற்றதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திசநாயகே நாளை திங்கட்கிழமை கொழும்பில் உள்ள காலனித்துவ கால அதிபர் செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
லெபனானுடன் இஸ்ரேலுக்கு என்ன பிரச்சனை? பேஜர், வாக்கி டாக்கி குண்டுவெடிப்பு எப்படி நடத்தப்பட்டது?
கடந்த 2019ம் ஆண்டு அதிபர் தேர்தலில் வெறும் 3 சதவீத வாக்குகளைப் பெற்ற ஜே.வி.பி.க்கு இந்த வெற்றி ஒரு முக்கிய மற்றும் மிகப்பெரிய திருப்புமுனையாகும். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்தத் தேர்தலில் மொத்தம் 76 சதவீத வாக்குகள் பதிவாகின என்று தரவுகள் கூறுகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சுமார் 32.76 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 17.27 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த 2022ல் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலைக்குப் பிந்தைய முதல் தேர்தல் இதுவாகும். இலங்கையின் பொருளாதாரம் பலவீனமானதால், இந்தத் தேர்தலில் விக்ரமசிங்கேவின் தலைமை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இலங்கையில் அரசியல் ரீதியாக பலமாக இருக்கும் ராஜபக்சே குடும்பத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்ற கருத்தும பரவி வருகிறது. ஆகவே தான் சுமார் 20 வருடங்களாக பாராளுமன்றத்தில் இருந்த அனுர குமார மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. இலங்கையின் தகுதியான 17 மில்லியன் வாக்காளர்களில், சுமார் 75 சதவீதம் பேர் இம்முறை வாக்களித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜில்பைடனுக்கு சிறப்பு பரிசு கொடுத்து அசத்திய பிரதமர் மோடி!
- Anura Kumara Dissanayake is sri lanka new president
- Anura Kumara Dissanayake win sri lanka elections
- Sri Lanka New President
- Sri Lanka New President Anura Kumara Dissanayake
- Sri Lanka President Election Result
- marxist Leader Anura Kumara Dissanayake
- sri lanka president anura kumara dissanayake
- World News
- Srilanka China relationship