Asianet News TamilAsianet News Tamil

சபர்மதி ஆசிரமத்தில் தரையில் அமர்ந்த ட்ரம்ப்...!! கைத்தறி ஆடையை அணிந்தார்...!!

இந்தியா வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானத்தில் சுமார் 1.25 லட்சம் மக்கள் பங்கேற்கும் நமஸ்தே ட்ரம்ப் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் , 

american president trump siting in sabarmathy ashram - with trump
Author
Gujarat, First Published Feb 24, 2020, 12:42 PM IST

இந்தியா வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானத்தில் சுமார் 1.25 லட்சம் மக்கள் பங்கேற்கும் நமஸ்தே ட்ரம்ப் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் , இது டிரம்புக்கு மிகுந்த உற்சாகத்தையும் கௌரவத்தையும் அளிக்கும் நிகழ்வாக கருதப்படுகிறது இரண்டு தினங்களில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார் ,  அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி  மெலானியா ட்ரம்ப் மற்றும் அவரது மகள் இவான்கா ட்ரம்ப்  ஆகியோர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர் .  இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் விதமாக ட்ரம்ப்  மற்றும்  மெலானியா ட்ரம்ப் இருவரும் இரண்டு நாள் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர் .  இந்த இரண்டு நாள் சுற்றுப்பயணத்தில் ட்ரம்ப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார் . 

american president trump siting in sabarmathy ashram - with trump

முக்கிய அதிகாரிகள் மற்றும் தனது குடும்பத்தினருடன் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் வந்திறங்கிய  ட்ரம்பை இந்திய பிரதமர் மோடி வரவேற்றார் பின்னர் மனைவி மற்றும் மகளுடன் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடுகிறார்,   பின்னர் 1.05  ஐந்து மணிக்கு அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானத்திற்கு செல்கின்றார்,   அங்கு மைதானத்தில் சுமார் 1.25 லட்சம் மக்கள் பங்கேற்கும்  நமஸ்தே ட்ரம்ப் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர் .  பின்னர் மாலை 3:30  மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்படும் ட்ரம்ப்,  மாலை  4 .45 க்கு ஆக்ரா செல்கிறார் , மாலை 5 :15 மணிக்கு தாஜ்மஹால் சுற்றி பார்த்துவிட்டு  மாலை 6:45 மணிக்கு விமானத்தில் டெல்லி செல்லும் டிராம் அங்கு அமெரிக்க பாதுகாப்பு படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஐடிசி மவுரியா நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார் .  பின்னர் நாளை காலை 10 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளது . 

american president trump siting in sabarmathy ashram - with trump

இந்த வரவேற்பு நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் பின்னர் ராஜ்காட் சென்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார் .இதைத்தொடர்ந்து நாளை காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும் ட்ரம்பும்  நாளை காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் இரு  நாடுகளையும் மேம்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர் .  இந்த பேச்சுவார்த்தை முடிந்த பிறகு மாலை  3 மணிக்கு டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு செல்லும் ட்ரம்ப் அங்கு உள்ள அமெரிக்க அதிகாரிகளை சந்திக்க உள்ளார் .  பின்னர் இந்திய தொழிலதிபர்கள் உடனான சந்திப்பு நடைபெறுகிறது .  பின்னர் இரவு 7.30  மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ட்ரம்ப் இரவு 10 மணிக்கு அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்கிறார் .

Follow Us:
Download App:
  • android
  • ios