சீனாவுடனான நட்பு முட்டாள்தனம்..!! விரக்தியின் உச்சத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்..!!
சீனாவுக்கு நாங்கள் ஏராளமான உதவிகளை செய்திருக்கிறோம், அவர்களுக்கு ஆண்டுக்கு 500 பில்லியன் டாலர் நிதி நாங்கள் கொடுத்திருக்கிறோம்,
கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வுக் கூடத்திலிருந்து கசிந்தவையல்ல என்றால், அது ஏன் சீனாவின் மற்ற பகுதிகளில் பரவவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், மீண்டும் அவர் சீனா மீது இவ்வாறு சந்தேகம் எழுப்பியுள்ளார். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், நேற்று (வெள்ளிக்கிழமை) வெள்ளை மாளிகை ரோஸ் கார்டனில் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது:- அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு செய்து கொள்ளப்பட்ட முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தை கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர் நான் சற்று வித்தியாசமாக கருதுகிறேன், சீனாவுடன் பழகுவது ஒரு நல்ல விஷயமாக இருக்கும், அது நடக்குமா என்று எனக்கு தெரியவில்லை, அப்படி நடந்தால் நான் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் என்றார்.
மேலும் covid-19 சீனாவிடமிருந்து கிடைத்த பரிசு, அது மோசமான பரிசு, இது யாருக்கும் நல்லது அல்ல. இந்த வைரஸை அவர்கள் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தியிருக்க முடியும், ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. இந்த வைரஸ் வுஹானில் இருந்து கசியவில்லையென்றால் சீனாவில் மற்ற பகுதிகளுக்கு ஏன் அது பரவவில்லை.? என ட்ரம்ப் கேள்வி எழுப்பினார் தொடர்ந்து பேசிய அவர், சீனா, அமெரிக்காவை பெரிதும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது, சீனாவுக்கு நாங்கள் ஏராளமான உதவிகளை செய்திருக்கிறோம், அவர்களுக்கு ஆண்டுக்கு 500 பில்லியன் டாலர் நிதி நாங்கள் கொடுத்திருக்கிறோம், சீனாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் நாங்கள் நிறைய கொடுத்திருக்கிறோம், ஆனால் அதெல்லாம் எவ்வளவு முட்டாள்தனம் என்பது புரிகிறது. தற்போது அந்த நிலைமை அனைத்தும் மாறிக்கொண்டே வருகிறது என கூறினார்.
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பில் அமெரிக்கா முன்னணியில் இருக்கிறது, அதற்கான ஆராய்ச்சியில் சாதகமான முடிவுகள் கிடைத்திருக்கிறது, மேலும் அமெரிக்கா தடுப்பூசி ஆராய்ச்சியில் நம்பமுடியாத அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேபோல், கடந்த மாதம் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை அரசாங்கம் அறிவித்ததை அடுத்து, வேலையின்மை விகிதம் எதிர்பார்த்ததைவிட 13.9 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனாலும் குறிப்பிடதக்க மந்த நிலை நீடிக்கிறது என்றார். தற்போதுள்ள நிலையில் இருந்து அமெரிக்கா மீண்டுவரும் என அவர் தெரிவித்ததுடன், தன்னை ஒரு "ராக்கெட் கப்பல்" அதாவது பொருளாதார மீட்டுருவாக்கம் என கூறிக்கொண்டார். நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு பிறகு அதன் அர்த்தத்தை தெரிவிப்பதாக அவர் கூறினார்.