Asianet News TamilAsianet News Tamil

சீனாவுக்கு ஜால்ரா போட்ட WHO க்கு ஆப்பு .!! 500 மில்லியன் டாலர் நிதியை மொத்தமாக நிறுத்தியது அமெரிக்கா..!!

சீனா கொடுக்கும் அதிக நிதியை பெற்றுக்கொண்டு கொரோனா விவகாரத்தில் சீனாவுக்கு சாதகமாக உலக சுகாதார  நிறுவனமும் அதன் தலைவர் டெட் ரோஸ் அதானமும் நடந்து கொள்கின்றனர் என அமெரிக்க அதிபர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். 
 

american president Donald trump stop fund for WHO for support china
Author
Delhi, First Published Apr 15, 2020, 12:36 PM IST

உலகச் சுகாதார நிறுவனத்திற்கு வழங்கிவந்த நிதியை நிறுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில் தற்போது அதற்கான நிதியை முற்றிலுமாக நிறுத்திவுள்ளதாக தெரிவித்துள்ளார் . உலகச் சுகாதார நிறுவனத்தில் ,  நிர்வாகம் சரியாக செயல்படாததால் நிதி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது . தனது கடமையை அந்த அமைப்பு செய்யத் தவறியதால்தான் உலகத்தில் இத்தனை உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகிறது என்றும் அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது ,  உலக அளவில் சுமார் இருபது லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு  நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது . உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை கடந்துள்ளது.  எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் இந்த வைரஸின் தாக்கம் மிக தீவிரமாக இருந்து வருகிறது.   அமெரிக்காவில் மட்டும் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் . 

american president Donald trump stop fund for WHO for support china

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவில் ஹூபே மாகாணம் வுஹானில் தோன்றிய இந்த வைரஸ் , 2 மாதங்கள் கழித்தே வெளிச்சத்திற்கு வந்தது ,  மோசமான வைரஸ் ஒன்று சீனாவை தாக்கி வருகிறது என சீனாவும் ,  உலக சுகாதார நிறுவனமும் ஒரு சேர அறிவித்தன . ( கலாம் தாழ்ந்த அறிவிப்பு என உலக நாடுகள் சீனாவை எச்சரித்தனர்) அதுமட்டுமின்றி இந்த வைரஸால் சீனாவில் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டனர் என்ற உண்மையான தகவல்களை சீனா மறைத்துவிட்டது ,  உண்மையான தகவல்களை அது வெளிப்படையாக சொல்ல வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.  இதற்கிடையில் அந்த வைரஸ் சில வாரங்களுக்கு முன்பு சீனாவில் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக சீனா அறிவித்தது.  அதுமட்டுமின்றி இந்த வைரஸால் மொத்தம் 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர் என்றும்,  அதில் 3 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்ததாகவும் சீனா கணக்கு காட்டியது ,  ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதை ஏற்க மறுத்தன,  சீனா திட்டமிட்டு தகவல்களை  மறைத்து வருகிறது ,  இதை உலக சுகாதார நிறுவனம் விசாரித்து உண்மையை உலகிற்கு பகிரங்கபடுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது .  ஆனால் சீனாவோ தான் தெரிவித்த  தகவலில் உறுதியாக நின்றதுடன் தாங்கள் எடுத்த முயற்சியின் பலனால்  வைரஸை கட்டுப்படுத்தியாக கூறி சமாளித்து வருகிறது. 

american president Donald trump stop fund for WHO for support china

இந்த வைரஸ் கடந்த  டிசம்பர் மாதம் தோன்றிய நிலையில் என் இரண்டு மாத தாமதத்திற்குப் பின்னர் அறிவிக்கப்பட்டது ,  இதன் உள்நோக்கம் என்ன..?  இது அமெரிக்காவின பயோ வாரா என கேள்வி மேல் கேள்வி கேட்டு சீனாவை துளைத்தது ஆனால் உலக சுகாதார நிறுவனமோ, சீனாவின் விரைவான நடவடிக்கைகள் மூலம் கொரோனா வைராஸ் சீனாவில்  கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, சிறப்பாக செயலாற்றிய சீனாவுக்கும் அந்நாட்டு மக்களுக்கும்  பாராட்டுகள் என  தெரிவித்ததுடன் சீனாவை முன்மாதிரியாகக் கொண்டு மற்ற நாடுகள் செயல்பட வேண்டுமென உலக நாடுகளுக்கு  அறிவுரை கூறியது.  இது அமெரிக்காவுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது ,  இதில் கோபத்தின் உச்சிக்கே சென்ற அதிபர் ட்ரம்ப் ,   நோய் தாக்கத்தின் உண்மைநிலையை உலகிற்கு சொல்ல வேண்டிய உலக சுகாதார நிறுவனமே இந்த விஷயத்தில் சீனாவுக்கு ஒத்து ஊதுவதுபோல்  நடந்து கொள்கிறது ,  சீனா கொடுக்கும் அதிக நிதியை பெற்றுக்கொண்டு கொரோனா விவகாரத்தில் சீனாவுக்கு சாதகமாக உலக சுகாதார  நிறுவனமும் அதன் தலைவர் டெட் ரோஸ் அதானமும் நடந்து கொள்கின்றனர் என அமெரிக்க அதிபர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். 

american president Donald trump stop fund for WHO for support china

அதனுடன் உலக சுகாதார நிறுவனத்திற்கு  அமெரிக்கா வழங்கி வரும் நிதியையும் நிறுத்தப் போவதாகவும் அவர் எச்சரித்தார் ,  இந்நிலையில்  வெள்ளை மாளிகையில் அமெரிக்க  உயரதிகாரிகளுடன்  உரையாற்றிய அவர்,   உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து தன்னுடைய கடமையிலிருந்து தவறி  வருகிறது , அந் நிறுவனம்  செய்த தவறுகளால் தான் உலகில் இவ்வளவு மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது,   அதுமட்டுமின்றி உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து சீனாவுக்கு சாதகமாக செயல்படுகிறது ,  பல உண்மைகளை சீனாவுடன் இணைந்து உலக சுகாதார நிறுவனம் மறைத்துவிட்டது , ஏற்கனவே நாம் ஏற்கனவே அறிவித்தபடி அந் நிறுவனத்திற்கு வழங்கி வரும் நிதியை நிறுத்த முடிவு செய்துள்ளோம் .  இனி அந்நிறுவனத்திற்கு அமெரிக்காவில் இருந்து நிதி வழங்கப்படாது  என அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.  ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400 மில்லியன்  டாலர் முதல் 500 மில்லியன் டாலர் வரை அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதி வழங்கி வந்தது,  இனி அது வழங்கப்படாது என ட்ரம்ப் கூறினார் .  அதுமட்டுமின்றி விரைவில் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர அமெரிக்கா முடிவு செய்துள்ளது என்ற அவர்  இதுதொடர்பாக அனைத்து மாகாண ஆளுநர்களுடன் கலந்துபோச உள்ளதாக கூறினார்.  மே -1ஆம்  தேதிக்கு முன்னர் ஓரளவுக்கு நல்ல நிலையில் உள்ள மாகாணங்களில் ஊரடங்கு தளர்த்த முடிவு எடுக்கப்படும் என கூறினார் . 
 

Follow Us:
Download App:
  • android
  • ios