அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா என்ற இடத்தில், நான்கு வாத்துக்கள் வழி தெரியாமல்  அருகிலிருந்த பெட்ரோல் நிலையத்திற்குள் நுழைந்தது.

என்ன செய்வது? யாருடைய வாத்தாக இருக்கும் என யோசனையில் இருந்த ஊழியர்கள்,  போலிசாருக்கு  தகவல் கொடுக்க, விரைந்து வந்த போலீசார் அந்த நான்கு வாத்துக்களையும் கைது செய்து காவல்  நிலையத்திற்கு அழைத்துசென்றனர்.

பின்னர் வாத்தின் உரிமையாளரை  யார் என்பதை தெரிந்துக்கொள்ள விசாரணையில் ஈடுபட்ட போலீசார் கடந்த ஒரு மாத காலமாக உரிமையாளரை கண்டுப்பிடிக்காமல் தானே வளர்த்து வந்துள்ளார்.

பின்னர் இந்த சம்பவத்தை பேஸ்புக்கில் பதிவிட, உலக அளவில்புகழ் பெற்றது இந்த வாத்துக்கள்.சமூக வலைத்தளம் மூலம்  இந்த செய்தி  உரிமையாளருக்கு  தெரியவர, ஓடோடி  சென்று  வாத்துக்களை   மீட்டு சென்றுள்ளார்.