அடுத்த மாதம் ஊரடங்கை தளர்த்த முடிவு ..!! விரக்தியின் உச்சத்தின் ட்ரம்ப், ஒத்து ஊதும் அரசியல் புள்ளிகள்..!!
நாடு முழுவதும் கண்காணித்து பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடனும் கட்டுப்பாடுகளை தளர்த்த உள்ளோம். அதே நேரத்தில் மீண்டும் பாதிப்பு அதிகரித்தால் கட்டுப்பாடுகளை தொடர்வோம் என அவர் கூறியுள்ளார் .
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தீவிரமாக இருந்து வரும் நிலையில் , வரும் மே மாதம் ஊரடங்கு உத்தரவை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்பு குழுவின் தலைவரும் வைரஸ் தடுப்பு ஆலோசகரான அந்தோணி பௌசி தெரிவித்துள்ளார் . முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க மக்களை வைரஸில் இருந்து பாதுகாப்பதுடன் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாக்க வேண்டிய நெருக்கடி தனக்கு ஏற்பட்டுள்ளது , எனவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஊடரட்கு உத்தரவை தளர்த்துவது குறித்த மிக முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நிர்பந்தம் தனக்கு இருப்பதாக கூறியுள்ளார் . இந்நிலையில் வரும் மே மாதம் ஊரடங்கு உத்திரவை தளர்த்த திட்டம் வைத்திருப்பதாக பௌசி கூறியுள்ளார் . உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது . இதுவரையில் உலகளவில் 18 லட்சத்து 86 ஆயிரத்து 4666 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் . உலகளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 101 ஆக அதிகரித்துள்ளது .
எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு வைரசுக்கு அமெரிக்கா கடுமையாக பாதித்துள்ளது, அமெரிக்காவில் மட்டும் 5 லட்சத்து 60 ஆயிரத்து 433 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது . கடந்த 6 மணிநேரத்தில் 133 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது . இதுவரையில் 22, 815 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவைத் தொடர்ந்து இத்தாலி , ஸ்பெயின் , பிரான்ஸ் , ஜெர்மனி , பிரிட்டிஷ் , ஈரான் , துருக்கி உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . இந்நிலையில் அமெரிக்காவில் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . முறையான மருத்துவ உபகரணங்களே , போதிய படுக்கை வசதிகளோ இல்லாததால் அங்கு அனைவருக்கும் சிகிச்சை வழங்குவது பெரும் சவாலாக இருந்து வருகிறது . அதே நேரத்தில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவருகின்றனர் . தொழிற்சாலைகள் அனைத்தும் முடங்கியுள்ளது . வணிக வளாகங்கள் அரசு நிறுவனங்கள் முக்கியமாக மூடப்பட்டுள்ளது .
இதனால் அமெரிக்காவில் மக்கள் சொல்லெனாத் துயருக்கு ஆட்பட்டுள்ளனர் . எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவின் பொருளாதாரம் முற்றிலுமாக சரிந்துள்ளது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடும் என்றும் லட்சக்கணக்கான மக்கள் வேலையில் இருந்து தூக்கி எறியப்படலாம் என்றும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர் . ஒருபுறம் கொரோனா வைரஸின் தாக்கம் அமெரிக்காவை திணறடித்து வரும் நிலையில் அமெரிக்காவின் பொருளாதாரம் பாதாளத்திற்கு சென்றுள்ளது . எனவே இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க, வைரஸ் நோய் தடுப்பு குழுவின் தலைவரும், வைரஸ் தொற்று தடுப்பு ஆலோசகருமான அந்தோணி பௌசி, கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா இருக்கிறது , இந்த இக்கட்டில் இருந்து மீண்டு வர நாட்டு மக்கள் முயற்சித்தாலும் அதன் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது .
ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் பலர் வேலை இழந்து தவித்து வருகின்றனர் , இந்நிலையில் அமெரிக்க பொருளாதாரத்தையும் சரிவில் இருந்து மீட்கும் பொறுப்பு அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மே மாதம் அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் தளர்த்தல் தொடங்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது . எனவே இம்மாத இறுதிக்குள் நாடு முழுவதும் கண்காணித்து பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடனும் கட்டுப்பாடுகளை தளர்த்த உள்ளோம். அதே நேரத்தில் மீண்டும் பாதிப்பு அதிகரித்தால் கட்டுப்பாடுகளை தொடர்வோம் என அவர் கூறியுள்ளார் . இந்நிலையில் நியூயார்க் ஆளுனர் ஆண்ரூ கியுமோ, நியூயார்க் நகரத்தை விரைவில் திறக்க விரும்புகிறோம் திறக்கும்போது எச்சரிக்கையுடன் புத்திசாலித்தனமாகவும் இருக்கவேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார் .