எதிரிநாடுகளை அழிக்க சீனா போட்ட கேடுகெட்ட திட்டம்..!! 20 லட்சம் கோடி இழப்பீடு கேட்ட அமெரிக்கர்..!!

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில் கிடைத்த தகவலை மேற்கோள் காட்டியுள்ள லாரி கிளேமேன்  சீன தலைநகர் வூகனில் முதல் முதலில் தோன்றிய அந்த வைரஸ் சுமார் 189 நாடுகளில் பரவியுள்ளது . 
 

american advocate case filing against china , regarding corona attack

உலக அளவில் சீனா வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அமெரிக்காவை சேர்ந்த வழக்கறிஞர் சீனா மீது வழக்கு தொடுத்துள்ளார்.  அதில் சீனா இழப்பீடாக 20 லட்சம் கோடி அமெரிக்க டாலரை  இழப்பீடாக கொடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார் . இந்நிலையில் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-  அமெரிக்காவை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் லாரி கிளேமேன் அமெரிக்க மாவட்ட  நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.  அதில் சீனா இந்த வைரசை ஒரு  உயிரியல் ஆயுதமாக வடிவமைத்துள்ளது.   இந்நிலையில் இந்த வைரசை  விடுவிக்க விரும்பினாலும் இல்லாவிட்டாலும் சீனா அமெரிக்கா சட்டம் சர்வதேச சட்டங்கள் ஒப்பந்தங்கள் மற்றும் விதிமுறைகளை மீறி  உள்ளது.  

american advocate case filing against china , regarding corona attack

இதுபோன்ற ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற ஒப்பந்தத்தில் சீனா  கையொப்பமிட்டுள்ள  நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கை ,  மக்கள் சீனக் குடியரசின் அதிகாரபூர்வ நடவடிக்கையாக இருக்க முடியாது .  மேலும் இவை சட்ட ரீதியான நோய் எதிர்ப்பு சக்தி போன்ற எந்த ஒரு கூற்றுக்கும்  உட்பட்டவை அல்ல .  அதேபோல சீனா ஆய்வகத்தில் வைத்து வைரஸை பராமரிப்பதன் நோக்கம் அமெரிக்க குடிமக்கள் ,   சீனாவின் எதிரி என்று கருதப்படும் நாடுகளிலுள்ள  மற்றவர்களையும் அந்நாடுகளிலுள்ள நிறுவனங்களையும் கொள்வதற்கு சீனா இதை பயன்படுத்தி உள்ளது .  இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில் கிடைத்த தகவலை மேற்கோள் காட்டியுள்ள லாரி கிளேமேன்  சீன தலைநகர் வூகனில் முதல் முதலில் தோன்றிய அந்த வைரஸ் சுமார் 189 நாடுகளில் பரவியுள்ளது . 

american advocate case filing against china , regarding corona attack

இதன் மூலம் 3 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதித்துள்ளனர்.  சுமார் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் உயிரிழந்துள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார் .  மிகவும் ஆபத்தான நோயாக உள்ள இந்த சீன வைரஸ் ஆக்ரோஷ தன்மை கொண்டுள்ளது ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பரவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இதனால் இது மக்கள் மத்தியில் விரைவாகவும் எளிதாகவும் பரவுகிறது இது ஒரு புதிய நோயாக இருப்பதால் இதுவரை இதற்கு முறையான தடுப்பூசிகள் இல்லை அதே போல பரவும்  முறைகள் குறித்தும் முழுமையாக அறியப்பட முடியவில்லை .  இந்த நோய் காய்ச்சலை விட 10 மடங்கு ஆபத்தானது என்று தோன்றுகிறது என குறிப்பிட்டுள்ள அவர் வெகுஜன மக்களை கொல்ல  பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஒரு உயிரியல் போர் ஆயுதமாக இதை சீனா பயன்படுத்தியுள்ளது என தான் தாக்கல் செய்துள்ள மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.  
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios