மோடியை போல் மிமிக்ரி செய்து கிண்டலடித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
பிரதமர் மோடியின் ஆங்கில உச்சரிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிண்டல் செய்ததாக அந்த நாட்டின் முன்னணி நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு அரசுமுறை பயணம் செல்வதற்கு பெயர்போன பிரதமர் மோடி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளை நிறுத்தியிருப்பது, பொருளாதாரம், பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அமெரிக்க அதிபரிடம் பேசினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு, பிரதமர் மோடியை உண்மையான நண்பர் என டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால், பிரதமர் மோடியின் ஆங்கில உச்சரிப்பை டிரம்ப் கிண்டல் செய்ததாக வாஷ்ங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. உண்மையான நண்பன் என கூறிவிட்டு ஒரு நாட்டுடைய பிரதமரின் ஆங்கில உச்சரிப்பை கேலி செய்யும் விதமாக அதை டிரம்ப் மிமிக்ரி செய்துகாட்டியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
டிரம்ப் இனவெறி கொண்டவர் என விமர்சிக்கப்பட்டு வரும் வேளையில், இந்திய பிரதமர் மோடியை போல மிமிக்ரி செய்து கிண்டல் செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.