அமெரிக்காவில் மட்டும் 1 லட்சத்து 42 ஆயிரத்து 178 பேர் கொரோனா பாதிப்புள்ளாகியுள்ளனர். அதனால் 2 ஆயிரத்து 484 பேர் உயிரிழந்துள்ளனர். வல்லரசு நாடான அமெரிக்கா தனது மக்களை கொரோனா தாக்கத்தில் இருந்து காப்பற்ற ஏகப்பட்ட கெடுபிடிகளை விதித்துள்ளது. 

இதையும் படிங்க: சிம்புவுடன் ஓவர் நெருக்கமாக இருக்கும் ஹன்சிகா... வைரலாகும் "மஹா" போட்டோவால் குஷியான ரசிகர்கள்...!

இந்நிலையில் கொரோனாவால் 2 லட்சம் அமெரிக்கர்கள் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் தேசிய தொற்று நோய் சிகிச்சை மைய இயக்குநர் ஆண்டனி பாஸி தெரிவித்துள்ளார். இதனால் கவலை அடைந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வைரஸ் பரவுவதை தடுக்க சமூக விலகலை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும், ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாகவும் அறிவித்துள்ளார். 

இதையும் படிங்க: எடுப்பான முன்னழகை காட்டி... இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் யாஷிகா ஆனந்த்... வைரல் போட்டோ...!

மேலும் அமெரிக்காவில் இன்னும் 2 வாரங்களில் கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் உச்சகட்டத்தை அடையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம், ஜூன் 1ம் தேதிக்குள் கொரோனாவில் இருந்து நாம் அனைவரும் முழுமையாக மீளுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.