பலி எண்ணிக்கையில் அடித்து தூக்கிய அமெரிக்கா..!! நங்கூரமிட்டு அமர்ந்த கொரோனா... வாய் திறந்து கதறும் டரம்ப்..!

கிட்டத்தட்ட 5 லட்சத்து 49 ஆயிரத்து 327 பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர் . சுமார் 13 ஆயிரத்து 473 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

america death rate increasing and trump worrying about pandemic and economic

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியுள்ளது ,  26 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அங்கு உயிரிழந்துள்ளனர்.  இது அமெரிக்க வரலாற்றில் ஏற்பட்ட பெரும் துயரமாக கருதப்படுகிறது . ஆனாலும் அங்கு வைரஸ் தாக்கம்  கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டே  செல்வதால் ஒட்டுமொத்த அமெரிக்க மக்களும் பீதியில் உறைந்துள்ளனர்.  கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ்   ஒட்டுமொத்த சீனாவையும் கபளீகரம் செய்தது .  பல்வேறு நடவடிக்கைகளுக்கு பின்னர் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தது அதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் இடையில் அமெரிக்காவில் பரவத் தொடங்கிய கொரோனா வரலாறு காணாத அளவிற்கு அமெரிக்காவை மொத்தமாக பீடித்துள்ளது .  மக்கள் கூட்டம் கூட்டமாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.  வைரஸ் பரவலை தடுக்க  அமெரிக்கா திணறி வருகிறது ,  

america death rate increasing and trump worrying about pandemic and economic

ஒரு பக்கம் வைரஸ் தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது . நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிகிச்சை வழங்கும் மருத்துவர்களுக்கு போதிய கையுறைகள் மற்றும் பாதுகாப்பு கவச உடைகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர் .  இதே நிலை தொடர்ந்தால் ஆகஸ்ட் மாத  இறுதிக்குள் அமெரிக்காவில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கக் கூடும் என அமெரிக்காவில் சுகாதாரத்துறை அளவீட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது. ஆனாலும் விடாமுயற்சியுடன் கொரோனாவை எதிர்த்துப் போராடி வரும் அமெரிக்கா உலகிலேயே மக்கள் சமூகத்தில் அதிக பரிசோதனை செய்த நாடுகளின் பட்டியலில் முதலிட்டத்தில் உள்ளது.  இங்கே கிட்டத்தட்ட 30 லட்சத்து 66 ஆயிரத்து 791 பேருக்கு பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது . 

america death rate increasing and trump worrying about pandemic and economic

ஆனாலும் கொரோனா வைரஸ் பரவலை அந்நாட்டு அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை.  சீனாவில் அந்த வைரஸ் பரவியபோது கருத்து தெரிவித்த அதபர் ட்ரம்ப்,  எந்த வைரசையும் எதிர்கொள்ளும் ஆற்றல் அமெரிக்காவுக்கு உள்ளது , கொரோனாவை எதிர்கொள்ள அமெரிக்கா தயாராக உள்ளது என கூறியிருந்த நிலையில் தற்போது அமெரிக்காவையே கொரோனா மொத்தமாக நிலைகுலைய செய்துள்ளது , இதுவரையில் 6,14,211 பேருக்கு அமெரிக்காவில் கொரோனா வைரஸ்  உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது  325 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது .  இதுவரை 26 ஆயிரத்து 64  பேர் அமெரிக்காவில் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர் .  ஆனால் வெறும் 38 ஆயிரத்து 870 பேர் மட்டுமே சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் . கிட்டத்தட்ட 5 லட்சத்து 49 ஆயிரத்து 327 பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர் . சுமார் 13 ஆயிரத்து 473 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

america death rate increasing and trump worrying about pandemic and economic

இதுவரை அமெரிக்கா சந்தித்திராத ஒரு மோசமான  கொள்ளை நோய் இது என கூறப்படுகிறது. ஒரு புறம்  கொத்துக்கொத்தாக மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் ,   வரலாறு காணாத அளவிற்கு  பொருளாதார வீழ்ச்சியை அமெரிக்கப் சந்தித்து வருகிறது .  மக்களைக் காக்க வேண்டிய அதே நேரத்தில் நாட்டின் பொருளாதாரத்தையும் இளைஞர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறேன் என அதிபர் ட்ரம்ப் வாய்க்கு திறந்து புலம்பி வருகிறார் .  ஸ்பெயின் ,  இத்தாலி ,  பிரான்ஸ் ,  போன்ற நாடுகளில் உச்சத்திலிருந்த இருந்த கொரோனா இப்போது  மொத்தமாக அமெரிக்காவில் மையம் கொண்டுள்ளது .  அந்த நாடுகள் கொரோனாவில்  இருந்து விடுபட்டு வரும் நிலையில் ,  அமெரிக்காவால் அதன் தாக்கம் கொஞ்சம் கூட தணியவில்லை ,  எனவே கொரோனா பாதிப்பு இன்னும் ஒருசில வாரங்களுக்கு அங்க நீடிக்கலாம் எனவும் , உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் தொற்றுநோய் ஆராய்ச்சியியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர் .

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios