உலகின் பணக்கார நபர்களின் பட்டியல், உலகின் சிறந்த நிறுவனங்களின் பட்டியல், போன்ற பட்டியல்களை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டு வருகிறது.

கடந்த 23  ஆண்டுகளாக உலகின் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இருந்து வந்தார்.

இந்நிலையில் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகின் பணக்கார நபர்களின் பட்டியலில் பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ் முதலிடத்தில் உள்ளார்.  பெஜோஸ்-க்கு அமேசான் நிறுவனத்தில் 17 சதவீதம் பங்குகள் உள்ளது.

அவருடைய சொத்து மதிப்பு 90.5 பில்லியன் டாலர் ஆகும். அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள பில்கேட்ஸ் சொத்து மதிப்பு 90.5 பில்லியன் டாலர் ஆகும்.

53 வயதான பெஜோஸின் பெரும்பாலான சொத்துக்கள் அமேசான் நிறுவனத்தில் இருந்தாலும், வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் மற்றும் தனியார் விண்வெளி நிறுவனம் புளு ஆர்ஜின் ஆகியவற்றின் உரிமையாளராகவும் உள்ளார். 

ஃபோர்ப்ஸ் கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட உலகின் பணக்கார நபர்களின் பட்டியலில் கூட பில்கேட்ஸ் தான் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.