Asianet News TamilAsianet News Tamil

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தது.. ஆனால் நாசா அதை தற்செயலாக கொன்றுவிட்டது.. விஞ்ஞானி தகவல்

செவ்வாய் கிரகத்தில், 50 ஆண்டுகளுக்கு முன்பு நாசா விஞ்ஞானிகள், உயிரினங்களை கண்டுபிடித்ததாகவும், பின்னர் அதை தற்செயலாகக் கொன்றதாகவும் விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Alien life was found on Mars 50 years ago.. But NASA Killed It Accidentally.. Scientist claim
Author
First Published Aug 31, 2023, 11:08 AM IST

வேற்று கிரகங்களில் உயிரினங்கள் உள்ளதாக என்பது குறித்தும், வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்தும் பல்வேறு நாடுகள் விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறு அதிகம் என்பதால் அங்கு அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் நாசா ஆராய்ச்சியாளர் ஒருவர் செவ்வாய் கிரகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஆனால் விரைவில் அழிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆசிரிய உறுப்பினரான டிர்க் ஷூல்ஸ்-மகுச், என்பவர் தான் கூற்றை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து வேற்று கிரக உயிரினங்களைக கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் தற்செயலாக அவற்றை நாம் அழித்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Big Think என்ற டிஜிட்டல் தளத்தில் இதுகுறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் நாசாவின் ஆய்வு குறித்த பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் “ கியூரியாசிட்டி ரோவருக்கு முன், நாசா 1970களின் நடுப்பகுதியில் வைக்கிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்காக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இரண்டு லேண்டர்களை அனுப்பியது. அந்த லேண்டர்கள், மட்டுமல்லாமல், செவ்வாய் மண்ணின் உயிரியல் பகுப்பாய்வையும் செய்தது, இது செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்ததற்கான கண்டறிவதை முதன்மை நோக்கமாகக் கொண்டது.

அதன்படி, அங்கு கணிசமான நீர் ஓட்டங்களின் விளைவுகளுடன் ஒத்துப்போகும் ஏராளமான புவியியல் அமைப்புகளைக் கொண்டிருந்தன. செவ்வாய் கிரகத்தின் எரிமலைகள் மற்றும் அதன் சரிவுகள் ஹவாயில் உள்ள எரிமலைகளுடன் நெருங்கிய ஒற்றுமையைக் கொண்டிருந்தன.

ஆதித்யா எல்-1 சூரியனுக்கு எவ்வளவு பக்கத்தில் போகும்? இதற்கு முன் மிக அருகில் சென்று ஆய்வு செய்தது யார்?

லேண்டர்கள் சிறிய அளவிலான குளோரினேட்டட் ஆர்கானிக்ஸை அடையாளம் கண்டது. இருப்பினும், அடுத்தடுத்த செவ்வாய் பயணங்கள் செவ்வாய் கிரகத்தில் பூர்வீக கரிம சேர்மங்கள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. நாசா அனுப்பிய வைக்கிங் சோதனைகளில் ஒன்று, மண் மாதிரிகளில் தண்ணீரைச் சேர்ப்பதை நோக்கமாக கொண்டது. ஊட்டச்சத்துக்கள் மற்றும் கதிரியக்க கார்பன் (கார்பன்-14) உட்செலுத்தப்பட்ட நீர் செவ்வாய் மண்ணில் செலுத்தப்பட்டது. செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான நுண்ணுயிரிகள் இருந்தால், அவை ஊட்டச்சத்துக்களை உட்கொண்டு கதிரியக்க கார்பனை வாயுவாக வெளியிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பினர். ஆரம்ப முடிவுகள் இந்த கதிரியக்க வாயு உமிழ்வைக் குறிப்பிட்டன, ஆனால் மீதமுள்ள முடிவுகள் முடிவில்லாமல் இருந்தன.

இந்த சாத்தியமான நுண்ணுயிரிகளை நாம் அழித்திருக்கலாம். பல வைக்கிங் சோதனைகள் மண்ணின் மாதிரிகளில் தண்ணீரைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது. சோதனைகளுக்காக சேகரிக்கப்பட்ட செவ்வாய் கிரக நுண்ணுயிரிகளால் அந்த அளவு தண்ணீரை சமாளிக்க முடியவில்லை. சிறிது நேரம் கழித்து இறந்துவிட்டது," என்று குறிப்பிட்டுள்ளார். 

செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கான மனிதகுலத்தின் தேடல்

நமது கிரகத்தை தவிர மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ சாத்தியக்கூறு இருக்கிறதா என்பதை மனித குலம் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறது. அதில் குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ அதிக சாத்தியக்கூறு இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த வகையில் தற்போது, செவ்வாய் கிரகத்தின் கரடுமுரடான நிலப்பரப்பில் நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர் பயணித்து வருகிறது. இது நமது அண்டை கிரகத்தின் ரகசியங்களை அவிழ்க்க உருவாக்கப்பட்ட சர்வதேச, கிரகங்களுக்கு இடையேயான ரிலே குழுவின் ஒரு பகுதியாகும்.

2028 ஆம் ஆண்டில், நாசா தலைமையிலான செவ்வாய் ராக்கெட் மற்றும் சிறிய செவ்வாய் கிரக ஹெலிகாப்டர்களை சுமந்து கொண்டு பூமியிலிருந்து லேண்டர் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லேண்டர் ரோவர் அருகே உள்ள பள்ளம் அருகே தரையிறங்கும். குறிப்பிடத்தக்க வகையில், செவ்வாய் கிரகத்தின் மாதிரிகளை சேகரிப்பதற்கு வசதியாக, லேண்டர் பெர்ஸெவரன்ஸ் ரோவருக்கு அருகில் இருக்க வேண்டும். அது அதன் இலக்கு தளத்தில் இருந்து 60 மீட்டர் தொலைவில் தரையிறங்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios