Watch: நடுவானில் கழன்று விழுந்த கதவு! அவசரமாகத் தரையிறங்கிய அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம்!
போயிங் 737 மேக்ஸ் 9 விமானம் மாலை 5:07 மணிக்கு புறப்பட்டு, கலிபோர்னியாவின் ஒன்டாரியோவுக்குச் சென்றது. ஜன்னல் கதவு பறந்துவிட்டதால் 20 நிமிடங்களில் போர்ட்லேண்ட் விமான நிலையத்திற்குத் திரும்பியது.
விமானத்தின் ஜன்னல் கதவு திடீரென கழன்று விழுந்ததால் அலாஸ்கா ஏர்லைன்ஸ் தனது போயிங் 737-9 விமானத்தை வெள்ளிக்கிழமை அவசரமாகத் தரையிறக்கியது. 177 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த அந்த விமானம் அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் உடனடியாகத் தரையிறக்கப்பட்டது.
"171 பயண்கள் மற்றும் 6 பணியாளர்களுடன் போர்ட்லேண்ட் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது" என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற நிகழ்வு அரிதானது என்றும் அலாஸ்கா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
போயிங் 737 மேக்ஸ் 9 விமானம் மாலை 5:07 மணிக்கு புறப்பட்டு, கலிபோர்னியாவின் ஒன்டாரியோவுக்குச் சென்றது. ஜன்னல் கதவு பறந்துவிட்டதால் 20 நிமிடங்களில் போர்ட்லேண்ட் விமான நிலையத்திற்குத் திரும்பியது என விமான கண்காணிப்பு இணையதளமான ஃப்ளைட்அவேர் தெரிவித்துள்ளது.
இஸ்ரோவில் பாலின பாகுபாடு இல்லை: ஆதித்யா எல்1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி உறுதி
"இன்றிரவு நடந்த நிகழ்வைத் தொடர்ந்து, 65 போயிங் 737-9 விமானங்கள் இயக்கத்தைத் அனைத்தையும் தற்காலிக நிறுத்துகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையையாக இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்று அலாஸ்கா ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி பென் மினிகுசி தெரிவித்துள்ளார்.
"ஒவ்வொரு விமானமும் முழு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் முடிந்த பின்னரே சேவைக்குத் திரும்பும்" என்றும் அவர் உறுதி கூறியுள்ளார். இந்தச் சோதனைகள் சில நாட்களில் முடிக்கப்படும் எதிர்பார்ப்பதாவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே விமானத்தில் பயணித்த சிலர் எடுத்த வீடியோ மற்றும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன. அந்தப் பதிவுகளில் விமானத்தின் ஜன்னல் கதவு நடுவானில் தெறித்து விழுவதைக் காணமுடிகிறது.
இஸ்ரோவின் ஆதித்யா எல்1 எத்தனை ஆண்டுகள் செயல்படும்? என்னென்ன ஆய்வுகள் செய்யும்?