பேஷன் உடைகளுக்காக பாராட்டு பெற்ற பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி!
கணவர் ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்றதிலிருந்து, அக்ஷதா ராஜதந்திர நிகழ்வுகளில் நேர்த்தியான ஆடையில் தோன்றுவதைக் காண முடிந்தது.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி, பிரிட்டனில் சிறந்த ஆடை அணிந்த நபராக டாட்லர் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியத் தொழிலதிபர் இன்போசிஸ் நாராயணமூர்த்தி - சுதா மூர்த்தி தம்பதியின் மகள் அக்ஷதா மூர்த்தி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை மணந்துள்ளார்.
43 வயதான அக்ஷதா, ஆடை வடிவமைப்புக்கான டாட்லர் பத்திரிகையால் அந்நாட்டிலேயே சிறந்த முறையில் ஆடை அணிந்த நபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். "நவீன கால இராஜதந்திர ரீதியில் ஆடை அணிவதற்கு ஒரு சிறந்த உதாரணம்" என்று அவரை டாட்லர் இதழ் பாராட்டியுள்ளது.
மண் அள்ளி செல்ஃபி எடுங்கள்! சுதந்திர தினம் கொண்டாட புதுசா ஐடியா கொடுக்கும் பிரதமர் மோடி
அக்ஷதா மூர்த்தி கடந்த காலங்களிலும் தனது ஃபேஷன் தேர்வுகளுக்காக பரவலாகப் பாராட்டைப் பெற்றவர். தன் ஃபேஷன் உணர்வுக்காக ஜாக்கி கென்னடியுடன் ஒப்பிட்டு புகழப்பட்டார். அவரது கணவர் ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்றதிலிருந்து, அக்ஷதா ராஜதந்திர நிகழ்வுகளில் நேர்த்தியான ஆடையில் தோன்றுவதைக் காண முடிந்தது.
மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு வந்த அவர், கிளாரி மிஷெவ்ஸ்னி வடிவமைத்த மென்மையான நீல நிற ஆடையை அவர் அணிந்திருந்தார்.
மற்றொரு சந்தர்ப்பத்தில், வெள்ளை நிற ஆடையுடன் பொருந்திய கைப்பையுடன் தோன்றி அனைவரையும் அசத்தினார். G7 உச்சிமாநாட்டிற்காக ஜப்பான் சென்றபோது சிவப்பு கால்சட்டை மற்றும் ஆரஞ்சு நிற மெல்லிய தோல் ஹீல்ஸுடன் மஞ்சள் நிற லிசோ பிளவுஸ் அணிந்து கவர்ச்சிகரமாகத் தோன்றினார்.
ஃபேஷன் மீதான அக்ஷதாவின் ஆர்வம் அவரது குழந்தைப் பருவத்திலிருந்தே அவருடன் இருந்துவருகிறது. அக்ஷதா ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஃபேஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் அண்ட் மெர்ச்சண்டைசிங்கில் டிப்ளமோவும் பெற்றுள்ளார். அவர் 2009 இல் தனது நிதித்துறை வேலையை விட்டுவிட்டு, தனது சொந்த ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை நிறுவினார். துரதிர்ஷ்டவசமாக அது 2017இல் மூடப்பட்டது.
வெட்கக்கேடான ஆட்சி! மணிப்பூர் ஆளுநரைச் சந்தித்து முறையிட்ட 'இந்தியா' கூட்டணி தலைவர்கள்