"என் சக்கர நாற்காலியிலேயே நடனமாடுவேன்".. அபுதாபியில் "அஹ்லன் மோடி" நிகழ்ச்சி - உற்சாகத்துடன் பங்கேற்கும் பெண்!
Ahlan Modi Event : அபுதாபி சென்றுள்ள பிரதமர் மோடி "அஹ்லான் மோடி" நிகழ்ச்சியில் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்ற உள்ளார். அபுதாபியில் இந்திய சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்விற்கு 65,000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை காண சக்கர நாற்காலியில் வந்துள்ள ஒரு பெண்மணி தனது கருத்துக்களை செய்தியாளர்களிடம் வெளியிட்டுள்ளார். அபுதாபியில் நடைபெறும் இந்த 'அஹ்லான் மோடி' (வணக்கம் மோடி) நிகழ்வில் பங்கேற்பதற்காக அந்த வயதான பெண் துபாயில் இருந்து பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று அபுதாபி வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரை ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வரவேற்றார். இரு தலைவர்களும் கைகுலுக்கி ஒருவரையொருவர் கட்டித்தழுவினர்.
அபுதாபியில் பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு.. அவர் பயணத்தின் நோக்கம் என்ன? முழு விவரம்!
"நான் பாரதத்தை நேசிப்பதால் எனது தேசத்தின் மீதான அன்புதான் எனது உந்துதலாக இருக்கிறது". 48 வருடங்களாக நான் இங்கே இருக்கிறேன், எனக்கு முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது, ஆனால் அது பற்றி எனக்கு கவலையில்லை" என்று சக்கர நாற்காலியில் இருந்த அந்த வயதான பெண் உற்சாகத்துடன் கூறினார்.
"இரண்டு நாட்களாக நான் என்ன அணிய வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.. என் நகங்கள், என் மோதிரங்கள், என் பிண்டி, என் தாவணி, எல்லாவற்றையும், மொத்த ஹிந்துஸ்தானியைப் பாருங்கள்," என்று மகிழ்ச்சியோடு பேசினார் அந்த பெண்மணி. நான் இந்த நிகழ்ச்சியை ரசிப்பேன். நான் என் சக்கர நாற்காலியில் நடனமாடுவேன், அதில் எந்த பிரச்சனையும் இல்லை," என்று அந்த பெண்மணி புன்னகையுடன் பிரபல நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.
ஏறக்குறைய 3.5 மில்லியன் இந்திய வெளிநாட்டினர் சமூகம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மிகப்பெரிய இன சமூகமாகும், இது நாட்டின் மக்கள்தொகையில் தோராயமாக 35 சதவீதத்தைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.
அபுதாபியில் யுபிஐ சேவையை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடி, அதிபர் அல் நஹ்யான்!