அடுத்தடுத்து 3 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்... 12 பேர் உடல் சிதறி உயிரிழப்பு..!
ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதில், 12 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதில், 12 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுடன் அமெரிக்கா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், சில இடங்களில் தீவிரவாதிகள் தொடர்ந்து அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை அரசு ஊழியர்களை ஏற்றி சென்ற பேருந்து தலைநகர் காபூல் வந்த போது திடீரென வெடித்து சிதறியது. இதில் அரசு ஊழியர்கள் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் காயமடைந்தனர். அதனை தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று இருந்த நிலையில் அங்கு வந்த ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினான்.
இந்த இரு சம்பவங்களும் ஓய்வதற்குள் அடுத்து மற்றொரு இடத்தில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் அரசு ஊழியர்கள் 5 பேர் உள்பட மொத்தம் 12 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதனையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.