இராணுவ ஹெலிகாப்டர் விபத்து.... 25 பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானில் மோசமான வானிலை காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் பயணித்த 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் மோசமான வானிலை காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் பயணித்த 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் அனர் டாரா மாவட்டத்தில் இருந்து ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று ஹிராட் மாகாணத்துக்கு நேற்று புறப்பட்டு சென்றது. இதில் ராணுவ உயரதிகாரிகள் 25 பேர் பயணித்துள்ளனர். ஹெலிகாப்டர் புறப்பட்ட சற்று நேரத்தில் வானிலை மோசமானது.
இதனையடுத்து ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த 25 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.