MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • Time Traveler: 2118-ல் இருந்து வந்தேன்! 3ம் உலகப் போர், டைம் டிராவல்.. இணையத்தை அதிரவைத்த நோவா

Time Traveler: 2118-ல் இருந்து வந்தேன்! 3ம் உலகப் போர், டைம் டிராவல்.. இணையத்தை அதிரவைத்த நோவா

Time Traveler: 2118-ம் ஆண்டிலிருந்து வந்ததாக கூறும் 'நோவா'வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. உலகப் போர் முதல் டைம் டிராவல் வரை அவர் கூறிய தகவல்களுக்கு விஞ்ஞானிகள் அளித்த பதில் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Jul 04 2026, 08:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
டைம் டிராவலர் நோவா
Image Credit : Frepik

டைம் டிராவலர் நோவா

சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் பேசப்படும் வீடியோக்களில் ஒன்று, ApexTV யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள 18 நிமிட பதிவு. அதில் முகம் மறைக்கப்படும், குரல் மாற்றப்படும் பேசும் இளைஞர் ஒருவர், தன்னை 2118-ம் ஆண்டிலிருந்து வந்த 'நோவா' என அறிமுகப்படுத்தியுள்ளார். பாதுகாப்பு காரணங்களால் தனது உண்மையான பெயரை வெளியிட முடியாது என்றும், ரகசிய டைம் டிராவல் திட்டத்தில் பங்கேற்றதாகவும் அவர் கூறும் தகவல்கள் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

நோவாவின் கூற்றுப்படி, 2031-ல் தென் சீனக் கடலில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையேயான மோதலே மூன்றாம் உலகப் போரின் தொடக்கமாக மாறும். பின்னர் ரஷ்யா, நேட்டோ உள்ளிட்ட நாடுகள் இதில் இணையும் என்றும், 2034-ல் அணுகுண்டுத் தாக்குதலால் வெறும் மூன்று நாட்களில் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழப்பார்கள் என்றும் அவர் கூறுகிறார். 2040-ல் போர் முடிந்தாலும், கதிர்வீச்சால் வானம் சிவப்பாக மாறி, உலகம் கடுமையான சுகாதார நெருக்கடியை சந்திக்கும் எனவும் அவர் விவரிக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
மூன்றாம் உலகப் போர்
Image Credit : Freepik

மூன்றாம் உலகப் போர்

அதையும் தாண்டி, 2118-ம் ஆண்டின் உலகம் குறித்து அவர் கூறிய விவரங்கள்தான் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. உலக மக்கள் தொகை 350 கோடியாகக் குறைந்திருக்கும், அரசுகள் இல்லாமல் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களே உலகை நிர்வகிக்கும், குடிநீர் தனியார் கட்டுப்பாட்டில் இருக்கும், மனிதர்கள் செவ்வாய் மற்றும் நிலவில் குடியேறியிருப்பார்கள், பள்ளிகளில் டைம் டிராவல் ஒரு பாடமாக கற்பிக்கப்படும் என்றும் அவர் கூறுகிறார். இதற்கு ஆதாரமாக, சிவப்பு வானத்துடன் காணப்படும் லாஸ் வேகாஸ் புகைப்படம் மற்றும் தனது கையில் பொருத்தப்பட்டதாகக் கூறும் மைக்ரோசிப்பையும் அவர் காட்டுகிறார்.

ஆனால், இந்தக் கதையை விஞ்ஞானிகள் முழுமையாக மறுக்கின்றனர். இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி டாக்டர் தபன் மிஸ்ரா, எதிர்காலத்திற்கான பயணம் கோட்பாட்டளவில் பேசப்பட்டாலும், தற்போது அது சாத்தியமில்லை என்கிறார். மேலும், நோவா காட்டிய புகைப்படம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பு அதிகம் என்றும், கட்டிட அமைப்புகளில் காணப்படும் காட்சிப் பிழைகள் அதற்குச் சான்று என்றும் விளக்குகிறது. மனநல நிபுணர்கள், கவனத்தை ஈர்க்கும் சிலர் இத்தகைய கதைகளை உருவாக்குவது புதிதல்ல என கூறுகின்றனர்.

இட்லி பஞ்சு மாதிரி வேகணுமா? இந்த ஒரு ட்ரிக் மட்டும் பண்ணுங்க.! ஹோட்டல் டேஸ்ட்ல வரும்.!

Related Articles

Related image1
Ironing Hacks: கரண்ட், அயர்ன் பாக்ஸ் தேவையில்லை! 5 நிமிடத்தில் துணி சுருக்கத்தை போக்க மேஜிக் டிரிக்ஸ்!
Related image2
RBI: 2005-க்கு முன் அச்சிடப்பட்ட ரூ.10, 20, 50, 100 நோட்டுகள் செல்லாதா? ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு
33
வைரல் வீடியோ
Image Credit : Gemini AI

வைரல் வீடியோ

உண்மையில், ApexTV இதற்கு முன்பும் பல 'டைம் டிராவலர்' கதைகளை வெளியிட்டுள்ளது. 2023-ல் ஏலியன் தாக்குதல், 2025-ல் ஜாம்பி பரவல் போன்ற கணிப்புகள் எதுவும் நடக்கவில்லை. அந்த வீடியோக்களும் யூடியூப்பில் என்டர்டெயின்மென்ட் வகையின் கீழ் வெளியிடப்பட்டிருந்தன. அதனால், தேவையான தகவல் ஆதாரமாக இல்லாமல், பொழுதுபோக்கு உள்ளடக்கமாகவே பார்க்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் இந்தக் காலத்தில், உண்மை மற்றும் புனைகதை இடையேயான எல்லை மங்கிக்கொண்டே செல்கிறது. எனவே, உலகப் போர், டைம் டிராவல் அல்லது எதிர்கால கணிப்புகள் போன்ற அதிர்ச்சி தகவல்களை நம்புவதற்கு முன் Fact Check செய்வது அவசியம். இணையத்தில் வைரலாகும் ஒவ்வொரு கதையும் உண்மையாக இருக்க வேண்டியதில்லை. சில நேரங்களில், அது வெறும் கற்பனையை நம்ப வைக்கும் திறமையான காட்சிப்படுத்தலாக இருக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
உலகம்
அறிவியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இனி AC தேவையில்லை! வெயிலை விரட்டியடிக்க சீனா கண்டுபிடித்த மந்திர தொழில்நுட்பம்!
Recommended image2
AI Lawyer : ஒரிஜினல் வக்கீலை தோற்கடித்த AI Lawyer! அப்போ இனிமேல் வக்கீல்களின் நிலை?
Recommended image3
Sun Therapy: ICU நோயாளிக்கு வெயிலில் நடந்த மேஜிக்! சூரிய ஒளியில் சிகிச்சை! இது எப்படி சாத்தியம்?
Related Stories
Recommended image1
Ironing Hacks: கரண்ட், அயர்ன் பாக்ஸ் தேவையில்லை! 5 நிமிடத்தில் துணி சுருக்கத்தை போக்க மேஜிக் டிரிக்ஸ்!
Recommended image2
RBI: 2005-க்கு முன் அச்சிடப்பட்ட ரூ.10, 20, 50, 100 நோட்டுகள் செல்லாதா? ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved