- Home
- Business
- RBI: 2005-க்கு முன் அச்சிடப்பட்ட ரூ.10, 20, 50, 100 நோட்டுகள் செல்லாதா? ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு
RBI: 2005-க்கு முன் அச்சிடப்பட்ட ரூ.10, 20, 50, 100 நோட்டுகள் செல்லாதா? ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு
RBI: பழைய ரூபாய் நோட்டுகள் குறித்து வைரலான அறிவிப்பு மக்களிடையே மீண்டும் பணமதிப்பிழப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 2005-க்கு முன் அச்சிடப்பட்ட ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100 நோட்டுகள் செல்லாது என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு தகவல் மிக வேகமாக பரவி வருகிறது. அதில், 2005-க்கு முன் அச்சிடப்பட்ட ரூ.10, ரூ.20, ரூ.50 மற்றும் ரூ.100 நோட்டுகள் ஜூலை 1 முதல் செல்லாது என்றும், அவை பணமதிப்பிழப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த தகவல் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா லோகோவுடன் பகிரப்பட்டதால், அது உண்மையான அரசு அறிவிப்பைப் போலவே தோன்றியதால் பலரும் அதை நம்பி குழப்பமடைந்தனர்.
2005க்கு முன் நோட்டுகள்
இந்த வைரல் தகவல் குறித்து தற்போது பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) தெளிவான விளக்கம் அளித்துள்ளது. தனது உண்மைச் சரிபார்ப்பு பதிவில், சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்தத் தகவல் முற்றிலும் பொய்யானது, இதற்கு எந்த சட்ட அடிப்படையோ அல்லது அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்போ இல்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சிறிய மதிப்புடைய நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்யும் எந்த முடிவும் மத்திய அரசோ அல்லது இந்திய ரிசர்வ் வங்கியோ எடுக்கவில்லை எனவும் உறுதிப்படுத்தியுள்ளது.
மகாலட்சுமி ராஜயோகம்! இந்த 2 ராசிக்காரர்களுக்கு பணம், அதிர்ஷ்டம் குவியும்.. லிஸ்ட் உள்ளே
பணமதிப்பிழப்பு
இதனுடன், பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவும் தனது பெயரில் பரப்பப்படும் இந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளது. சமூக வலைதளங்களில் வங்கியின் பெயரைப் பயன்படுத்தி தவறான தகவல்கள் பகிரப்படுவதாக கூறியுள்ள வங்கி, வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் இந்த வதந்திகளை நம்பவோ, மற்றவர்களுக்கு பகிரவோ கூடாது என்று எச்சரித்துள்ளது.
ரூ.50 நோட்டு
இந்த விவகாரம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மீண்டும் விளக்கம் அளித்துள்ளது. 2005-க்கு முன் அச்சிடப்பட்ட ரூ.10, ரூ.20, ரூ.50 மற்றும் ரூ.100 நோட்டுகள் இன்று முழுமையாக செல்லுபடியாகும் என்றும், அவற்றைப் பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் நோக்கில் பழைய மகாத்மா காந்தி தொடர் நோட்டுகளை மாற்றிக்கொள்ளுமாறு கடந்த காலங்களில் அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், அவை செல்லாது என்று ஒருபோதும் அறிவிக்கவில்லை எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
பழைய நோட்டுகள்
2016-ஆம் ஆண்டு ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் திடீரென பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட சம்பவம் மக்களின் நினைவில் இருப்பதால், இதுபோன்ற செய்திகள் வேகமாக பரவி அச்சத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, ரூபாய் நோட்டுகள், வங்கி சேவைகள் அல்லது ஆர்பிஐ தொடர்பான எந்த தகவலாக இருந்தாலும், சமூக வலைதள பதிவுகளை மட்டும் நம்பாமல், ஆர்பிஐ மற்றும் பிஐபி பேக்ட் செக் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை உறுதிப்படுத்திய பிறகே நம்புவது பாதுகாப்பான அணுகுமுறையாகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

