இனி கருக்கலைப்பு மாத்திரையை பயன்படுத்தி கொள்ளலாம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அமெரிக்காவில் மைஃபெப்ரிஸ்டோன் என்ற கருக்கலைப்பு மாத்திரையை தற்காலிகமாக பயன்படுத்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, பெண்கள் விருப்பப்பட்டால் தங்கள் கருவை கலைத்துக்கொள்ளும் உரிமை நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கான கருக்கலைப்பு மாத்திரைகள் அமெரிக்க சந்தைகளில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், கருக்கலைப்பு செய்யும் உரிமையை செய்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள், அமெரிக்கா முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். கருக்கலைப்பு தங்களின் உரிமை என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த தீர்ப்பை தொடர்ந்து அமெரிக்காவின் 13 மாகாணங்களில் கருகலைப்புக்கான தடை அமலில் உள்ளது. மேலும் மைஃபெப்ரிஸ்டோன் உள்ளிட்ட மாத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் கருக்கலைப்புக்கு சட்ட அனுமதி அளிக்கப்பட்ட மாகாணங்களில் மைஃபெப்ரிஸ்டோன் உள்ளிட்ட கருக்கலைப்பு மாத்திரையை பயன்படுத்தி வருகின்றனர். வீட்டில் இருந்தபடியே இந்த மாத்திரையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.. மருத்துவர்கள் உதவி தேவையில்லை என்பதால் இந்த மாத்திரைகளை பயன்படுத்துவது எளிது.. ஒரு பெண் கர்ப்பிணி என்று உறுதியானதும் இந்த மாத்திரையை பயன்படுத்த வேண்டும். பின்னர் 48 மணி நேரத்திற்குள் மிசோபுரோஸ்டால் என்ற மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். 10 வார கர்ப்பத்திற்குள் இந்த 2 மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டால் கருக்கலைப்பு நடக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : என்னா அடி..! சிறுத்தையை திணறடித்த ராட்சத பல்லி.. வைரலாகும் வீடியோ..
இந்த சூழலில் மைஃபெப்ரிஸ்டோன் கருக்கலைப்பு மாத்திரையை உற்பத்தி செய்யும் மருந்து நிறுவனம் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைனின் நீதித்துறை சார்பில், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. அந்த மனுவில் மைஃபெப்ரிஸ்டோன் மாத்திரைகளை பயன்படுத்த தடை விதிக்கும் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது..
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கீழமை நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.. மேலும் மைஃபெப்ரிஸ்டோன் கருக்கலைப்பு மாத்திரையை தற்காலிகமாக பயன்படுத்தவும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் மைஃபெப்ரிஸ்டோன் மாத்திரைகள் இனி தடையின்றி கிடைக்கும்.
அமெரிக்காவில் மைஃபெப்ரிஸ்டோன் கருக்கலைப்பு மாத்திரை பயன்பாட்டுக்கு கடந்த 2000-ம் ஆண்டு உணவு மற்றும் மருந்து கழகம் ஒப்புதல் வழங்கியது. இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது முதல் தற்போது வரை 56 லட்சம் அமெரிக்க பெண்கள் இந்த மாத்திரையை பயன்படுத்தி கருக்கலைப்பு செய்துள்ளனர் என்று உணவு மற்றும் மருந்து கழகம் மதிப்பீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இப்தார் விருந்து ஏன்? ரமலானில் இஸ்லாமிய நண்பர்களுக்கு உதவ இதைத் தெரிஞ்சுக்கோங்க!