அபிநந்தனுக்கு சிக்கல்... விடுதலைையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு..!

இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொரப்பட்டுள்ளது. இந்த வழக்கையும் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

abhinandan issue...Petition filed in Pak court

இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொரப்பட்டுள்ளது. இந்த வழக்கையும் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 14-ம் தேதி புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பழிதீர்க்கும் விதமாக, பாகிஸ்தானின் பாலகோட்டில் செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாமை இந்திய விமானப்படை போர் விமானங்கள் கடந்த 26-ம் தேதி அதிகாலை குண்டுகள் வீசி தகர்த்தன. abhinandan issue...Petition filed in Pak court

இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை பாகிஸ்தான் போர் விமானங்கள் எல்லைக் கட்டுப்பாடு கோட்டை தாண்டி, இந்திய எல்லைக்குள் நுழைந்து ராணுவ நிலைகளை குறிவைத்து குண்டுவீசி வந்தன. சரியான நேரத்தில் இந்திய போர் விமானங்கள் இடைமறித்ததால், வெளிப்பகுதியில் குண்டுகளை வீசி பாகிஸ்தான் விமானங்கள் திரும்பின. அதில் எப்-16 விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது. அதேபோல, இந்தியாவின் மிக்-21 விமானத்தை பாகிஸ்தான் தாக்கியது. அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற சென்னையைச் சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் பாராசூட் மூலம் குதித்து பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தார். abhinandan issue...Petition filed in Pak court

இதனையடுத்து அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அபிநந்தனை விடுவிக்க வேண்டுமென இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தலைவர்களும் அந்நாட்டு அரசை வலியுறுத்தினர். இந்நிலையில் அபிநந்தனை விடுதலை செய்வதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அதிரடியா நேற்று அறிவித்தார். இதனையடுத்து இந்திய விமானி அபிநந்தன் இன்று மாலை 4 மணிக்கு வாகா எல்லைக்கு வர உள்ளார்.  abhinandan issue...Petition filed in Pak court

இதற்கிடையே அவரை விடுதலை செய்யக்கூடாது என பாகிஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில் இந்திய விமானப்படை விமானி பாகிஸ்தான் வான் எல்லையை தாண்டி குண்டு வீசுவதற்காக வந்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக குற்றம் புரிந்துள்ளார். அவர் இங்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை இஸ்லாமாபாத் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios