இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழருக்கு சிறப்பு அஞ்சல்தலை வெளியீடு

இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழரின் 200ஆம் ஆண்டு நிறைவைப் போற்றும் வகையில் சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டுள்ளது.

A special stamp issue to commemorate the 200th anniversary of Tamils of Indian origin sgb

இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழரின் 200ஆம் ஆண்டு நிறைவைப் போற்றும் வகையில் சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டுள்ளது. பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு அஞ்சல்தலையை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு இலங்கையிலே குடியமர்த்தப்பட்ட இந்திய வம்சாவளியினரின் இடப்பெயர்வை நினைவு கூறும் வகையிலே இந்திய அஞ்சல் துறையின் மூலம் ஒரு நினைவு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த விழாவில், இலங்கைத் தமிழர்களின் வாழ்வியல் தொடர்பான ஒரு குறும்படமும் திரையிடப்பட்டது. 

இந்த விழாவிற்கு தலைமை ஏற்று பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் திரு ஜே பி நட்டா அவர்கள். நம் மூதாதையர்கள் பட்ட துன்பத்தை இந்தப் படக்காட்சிகள், காட்டியது மிகக்குறைவே., அந்த துயரத்தின் ஆழத்தை நான் உணர்கிறேன் என்று கூறினார். தன் வாழ்வுரிமைக்காக நம் இந்திய வம்சாவளியினர் செய்த தியாகங்களை பெருமைப்படுத்தும் வகையிலே, நடைபெறும் இந்த அஞ்சல் தலை வெளியீடு என்றும் இது  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி என்றும் குறிப்பிட்டார். இந்தியா, இலங்கையில் வாழும் நம் இந்திய வம்சாவளியினரை மறக்கவில்லை என்றும்,  பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அவர்களுக்கு துணையாக இருக்கிறார் என்பதை உறுதி செய்கிறேன் என்று பேசினார்.

உச்ச நீதிமன்றம் சொன்னது மனசுல இருக்கட்டும்... ஆளுநருக்குச் செக் வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா அவர்கள் வெளியிட்ட அஞ்சல் தலையை பெற்றுக்கொண்ட இலங்கையின் கிழக்கு மாகாண மேதகு ஆளுநர் செந்தில் தொண்டைமான் அவர்கள், இந்திய நட்புறவையும், இந்தியாவுடனான நீண்டகால தொடர்பையும் விளக்கிப் பேசினார். இலங்கையில் தமிழர்கள் அரசின் முழு அங்கீகாரத்துடன் நிம்மதியாக வாழ, தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மறுமலர்ச்சிகளை பட்டியலிட்டார்.

A special stamp issue to commemorate the 200th anniversary of Tamils of Indian origin sgb
பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கும் திரு ஜே பி நட்டா அவர்களுக்கும், மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும், மத்திய இணை அமைச்சர் திரு. எல். முருகன்  அவர்களுக்கும்,  தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் திரு கே அண்ணாமலை அவர்களுக்கும், இலங்கை தரப்பிலிருந்து மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்

இந்திய அரசு கட்டிக் கொடுத்த பல்லாயிரக்கணக்கான வீடுகளும் வாழ்விடங்களும், நம் நாட்டு நாட்டு மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்ததாகக் கூறினார். 

ரூ.85,000 கோடிக்கு நலத்திட்டங்கள்! அடுத்த 10 ஆண்டுகளில் முழுமையாக மாறப்போகும் அயோத்தி!

முன்னதாக மாண்புமிகு  தேசியத் தலைவர் திரு நட்டா அவர்கள் மற்றும் விழாவில் பங்கேற்றிருந்த முக்கிய விருந்தினர்கள் அனைவரும் மேடையில் ஊடகங்களுக்கு  முன்னிலையில் வெளியிட, இலங்கையின் கிழக்கு மாகாண மேதகு ஆளுநர் செந்தில் தொண்டைமான் அவர்கள், பெற்றுக்கொள்ள சிறப்பு அஞ்சல்தலை வெளியீட்டு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்திய அஞ்சல் துறையின் தலைமைப் பொது மேலாளர் திருமதி. ஸ்மீதா குமார், புதிய அஞ்சல் தலையின் ஆல்பம் பதிவுகளை அனைவருக்கும் வழங்கினார்.

அப்போது மத்திய இணை அமைச்சர் திரு முருகன் அவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு வாழ் பிரிவின் திரு. விஜய் சவ்த்தேவாலே, திரு எச்.ராஜா அவர்கள், திரு.சக்கரவர்த்தி அவர்கள், வி.பி.துரைசாமி அவர்கள், திரு.பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள், இலங்கை தூதரகத்தின்  ஆக்கட்டிங் ஹை கமிஷனர், திருமதி பிரியங்கா விக்கிரமசிங்கே அவர்கள், பாரதிய பிரவாசி திவஸ் விருதாளர் திரு நடேசன் அவர்கள் மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் ஆகியோர் கலந்து கொள்ள அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 

முன்னதாக அனைவரையும் வரவேற்றுப் பேசிய பாஜக தமிழகத் தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் பிரதமர் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை, இலங்கை இந்திய தேசங்களின்  ராஜாங்க நடவடிக்கைகளை, பட்டியலிட்டார். பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், தமிழ் மக்கள் மீதும் புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளி தமிழர்கள் மீதும் காட்டி வரும் அன்பிற்கும் நல்லெண்ணத்திற்கும் நன்றிகளை தெரிவித்தார். 

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குறிப்பாக தமிழகத்தில் இருந்தும் பல்வேறு பாஜக தலைவர்களும் கலந்து கொண்ட இந்த விழாவில் பாஜக துணை தலைவர் திரு வி பி துரைசாமி அவர்கள் நன்றி உரை வழங்கினார்.

இவ்வாறு அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகமே அயோத்தி ராமர் கோயில் திறப்புக்காகக் காத்திருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios