Singapore Exhibition | சிங்கப்பூர் குடிசை முதல் கோபுரம் வரை! உருமாற்றத்தை எடுத்துக்காட்டும் புதிய கண்காட்சி
சிங்கப்பூரின் வளர்ச்சிக் காலத்தை உணர்த்தும் வகையில் அன்று முதல் இன்றுவரையிலான கட்டிட உருமாற்றத்தை எடுத்துக்காட்டும் புதிய கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் “From Mudflats to Metropolis” அதாவது கூரை வீட்டிலிருந்து பெருநகருக்கு மாற்றம் என்ற தலைப்பில் நகர்ப்புற உருமாற்றத்தை உணர்த்தும் வகையிலான புதிய கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. 1950-களில் இருந்த சிங்கப்பூர் முதல் தற்போதைய நவீன சிங்கப்பூர் அடைந்துள்ள வளர்ச்சியை இந்த கண்காட்சி பிரதிபலிக்கிறது.
தேசிய வளர்ச்சி அமைச்சகம், வீட்டமைப்பு வளர்ச்சிக் கழகம், தேசியப் பூங்காக் கழகம், P.U.B என்னும் தேசியத் தண்ணீர் அமைப்பு, நகர சீரமைப்பு ஆணையம் ஆகியவை இணைந்து இந்த கண்காட்சியை நடத்தி வருகிறது.
தேசிய வளர்ச்சித்துறை அமைச்சர் டெஸ்மண்ட் லீ (Desmond Lee) நகர சீரமைப்பு ஆணைய நிலையத்தில் Singapore's From Mudflats to Metropolis கண்காட்சியை தொடங்கிவைத்து பார்வையிட்டார்.
போன் ரிப்பேர்.. பழுதுபார்க்க கொடுத்த கஸ்டமரை பதம் பார்த்த நபர் - அந்தரங்க போட்டோக்களை திருடி மாட்டியது எப்படி?
இந்த கண்காட்சி, நான்கு முக்கிய கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு வீட்டு வசதியை ஏற்படுத்துதல், தோட்டம் நிறைந்த அழகான நகரை உருவாக்குதல், அனைவருக்கும் தூய்மையான மற்றும் நீடித்த தண்ணீர் விநியோகம், வேலையில்லா திண்டாட்டம், சிறந்த விளையாடும் இடமாக சிங்கப்பூரை மாற்றுதல் போன்றவற்றின் அடிப்படையில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சி இன்று முதல் அடுத்த மாதம் நவம்பர் மாதம் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சிக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.