Chinese Rocket Falling to Earth: பூமியில் இன்று விழ இருக்கும் சீனாவின் 23 டன் ராட்சத ராக்கெட்! எங்கு விழுமோ??

சீனாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்ட லாங் மார்ச் 5பி ராக்கெட் இன்று இரவு அல்லது நாளை பூமியில் மோதக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எந்த இடத்தில் ராக்கெட் விழும், எப்போது விழும் என்பது விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

A 23-ton Chinese rocket will crash into the Earth on Friday. But when and where will it touch down?

சீனாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்ட லாங் மார்ச் 5பி ராக்கெட் இன்று இரவு அல்லது நாளை பூமியில் மோதக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எந்த இடத்தில் ராக்கெட் விழும், எப்போது விழும் என்பது விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையத்திலிருந்து கடந்த அக்டோபர் 31ம் தேதி  லாங் மார்ச் 5பி ராக்கெட் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் உருவத்தில் 10 மாடிக் கட்டிடம் போன்றும், 23 டன் எடை கொண்டதாக இருக்கும் என்று அமெரிக்காவின் ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் விவரித்துள்ளது. ஆனால் இந்த ராக்கெட் ஏவப்பட்டது தோல்வியில் முடிந்தது. இதனால் ராக்கெட்டின் முழுமையான பகுதி நிர்ணயிக்கப்பட்ட இடத்தை அடையாமல் பூமியை நோக்கி வருகிறது. 

கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியுடன் பைஜூஸ் நிறுவனம் ஒப்பந்தம்: பிராண்ட் அம்பாசிடராக நியமனம்

சீனாவின் லாங் மார்ச் 5பி ராக்கெட் தற்போது பூமியின் நீள்வட்டப் பாதைக்குள் நுழையவில்லை. அவ்வாறு நுழைந்தவுடன் ராக்கெட் தனது கட்டுப்பாட்டை இழந்து, எந்த திசையில் வேண்டுமானாலும், பயணித்து எந்த நாட்டிலும், எந்த இடத்திலும் மோதி விழக்கூடும்.

எந்த இடத்தில் ராக்கெட்டின் பாகங்கள் விழும், எங்கு ராக்கெட் மோதும் என்பது தெரியாது. பூமியில் விழும்போது மனிதர்கள் மீதோ அல்லது மனிதர்கள் வாழுமிடத்தில் விழுந்தாலோ பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்று ஏரோ ஸ்பேஸ் தெரிவித்துள்ளது

பூமியின் நீள்வட்டப் பாதைக்கு மேல் சுற்றிவரும் ராக்கெட்டை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகிறார்கள். ராக்கெட் நகரும் இடங்கள், புள்ளிவிவரங்களை வைத்து சரியான இடத்தை கணிக்க முடியுமா என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

இஸ்ரேலின் அடுத்த பிரதமராகிறார பெஞ்சமின் நெதன்யாகு: 90 சதவீத வாக்குகள் எண்ணிக்கையில் உறுதி

விஞ்ஞானிகளின் சமீபத்திய கணக்கின்படி, பூமியின் நீள்வட்டப் பாதைக்குள் இந்திய நேரப்படி 4.30 மணிக்கு சீனாவின் ராக்கெட் நுழையும் என்று ஏரோஸ்பேஸ் கணித்துள்ளது. இந்த மணி உறுதியானது அல்ல, இந்த நேரத்திலிருந்து 3 மணிநேரம் குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ ஆகலாம். 

பெரும்பாலும், சீனாவின் ராக்கெட்டின் பெரும்பகுதி மத்திய அமெரி்க்கப் பகுதியில் விழுவதற்கே வாய்ப்புகள் உள்ளன என்று ஏரோஸ்பேஸ் தெரிவித்துள்ளது.

 

ராக்கெட்டின் பெரிய பகுதிகள் ஆப்பிரி்க்காவிலும், வட அமெரிக்காவிலும் விழக்கூடும். ஆனால் ராக்கெட்டின் பாகங்கள் கடலில் விழுவதற்கான சாத்தியங்கள் குறைவு, கடல் பகுதியை நோக்கி ராக்கெட் பயணிக்காது என்று ஏரோஸ்பேஸ் தெரிவித்துள்ளது.

பூமியிலிருந்துவிண்ணுக்கு ஏவப்பட்ட ராக்கெட் காலம் முடிந்தபின் வளிமண்டலத்திலேயே சுற்றிவரும். சில ராக்கெட்டுகள் பூமியின் நீள்வட்டப் பாதைக்குள் வரும்போது பூமியில் விழும். ஆனால், பூமியில் மோதும்போது புவிஈர்ப்பு விசையால் ராக்கெட்டின் பெரும்பகுதி பாகங்கள் எரிந்துவிடும். ஆனால், எரியாத பாகங்கள் பூமியில் விழும்போது சேதங்களை ஏர்படுத்தும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios