Asianet News TamilAsianet News Tamil

பீதியைக் கிளப்பும் நாசா! பூமியை நோக்கி சீறிப் பாய்ந்து வரும் 720 அடி சிறுகோள்!

2024 ON என என்ற சிறுகோள் பூமியை நோக்கி பயங்கர வேகத்தில் சீறிப்பாய்ந்து வருகிறது எனவும் இது தோராயமாக 720 அடி விட்டம் கொண்டது என்றும் நாசா கூறியுள்ளது.

720 foot huge asteroid approaching Earth at high speed: NASA sgb
Author
First Published Sep 3, 2024, 2:57 PM IST | Last Updated Sep 3, 2024, 3:57 PM IST

2024 ON என பெயரிடப்பட்ட மிகப்பெரிய சிறுகோள் குறித்து நாசா சமீபத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பூமியை நோக்கி பயங்கர வேகத்தில் சீறிப்பாய்ந்து வருகிறது எனவும் இது தோராயமாக 720 அடி விட்டம் கொண்டது என்றும் நாசா கூறியுள்ளது.

நாசாவின் பூமிக்கு அருகில் உள்ள வான்பொட்களை கண்காணிக்கும் குழு 2024 ON என்ற சிறுகோளை முதன்முதலில் கண்டறிந்துள்ளது. இந்த சிறுகோள், அதன் அளவு மற்றும் அதன் பூமியை நோக்கி நெருங்கி வேகமாக வருவதால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து விஞ்ஞானிகள் விவரித்துள்ளனர்.

சிறுகோள் பயணிக்கும் பாதை கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து விஞ்ஞானிகளால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது செப்டம்பர் 15, 2024 அன்று பூமிக்கு மிக அருகில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 620,000 மைல் தொலைவில் பூமியைக் கடந்து செல்லும் என்றும் இது தோராயமாக பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தொலைவைவிட 2.6 மடங்கு தூரம் ஆகும் என்றும் நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Unified Pension Schemes: பொருளாதாரத்திற்கான மோடி அரசின் ஓய்வூதியத் திட்டம்!!

சிறுகோளின் அளவு மற்றும் வேகம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. 720 அடி விட்டம் கொண்ட சிறுகோள் 2024 ON பொதுவாக பூமிக்கு அருகில் செல்லும் பல சிறுகோள்களை விட பெரியது. 60 மாடி கட்டிடத்தின் உயரம் கொண்டிருக்கிறது. இதன் வேகம், மணிக்கு சுமார் 25,000 மைல்கள் (சுமார் 48,000 கி.மீ.) என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சிறுகோளின் பாதையில் சிறிய விலகல் ஏற்பட்டால்கூட அது பூமியைப் பாதிக்கக் கூடும். அது பூமியில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

கலிபோர்னியாவின் பசடேனாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் (ஜேபிஎல்) சிறுகோளின் நகர்வுகளைக் கண்காணிப்பதிலும் பகுப்பாய்வு செய்வதிலும் முன்னணியில் உள்ளது. மேம்பட்ட ரேடார் மற்றும் ஆப்டிகல் தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி, 2024 ON இன் அளவு, வடிவம், நகர்வு பற்றிய விரிவான தகவல்களை சேகரிக்கின்றனர். இந்தச் சிறுகோளின் சாத்தியமான தாக்கத்தைப் புரிந்துகொள்வதற்கும் அச்சுறுத்தலைத் தணிப்பதற்கும் இந்தத் தகவல்கள் முக்கியமானவை.

ரூ.50 லட்சம் வீட்டுக்கடனை இந்த முறையில் செலுத்தினால் ரூ.20 லட்சம் சேமிக்க முடியும்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios