Asianet News TamilAsianet News Tamil

Unified Pension Schemes: பொருளாதாரத்திற்கான மோடி அரசின் ஓய்வூதியத் திட்டம்!!

ஒருங்கிணைந்த ஓய்வூதித் திட்டத்தின் முக்கிய அம்சங்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கும் இதற்கும் உள்ள வேறுபாடுகள் மற்றும் இந்தியாவின் பொருளாதாரத்தில் இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பவை குறித்துப் பார்ப்போம்.

Unified Pension Scheme: A Thoughtful Approach To Economic Stability And Social Security sgb
Author
First Published Sep 3, 2024, 12:52 PM IST | Last Updated Sep 3, 2024, 2:08 PM IST

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (யுபிஎஸ்) மோடி அரசாங்கம் தொடங்கியுள்ளது. இது இந்தியாவில் ஓய்வூதிய அமைப்புகளின் கவலைகளைத் தீர்ப்பதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். முந்தைய திட்டங்களின் ஆபத்துக்களைத் தவிர்த்து பொருளாதார வலிமையை உறுதியளிக்கும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அரசு மற்றும் குடிமக்கள் இருவருக்கும் நீண்டகால நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான அணுகுமுறை இத்திட்டத்தில் காணப்படுகிறது. ஒருங்கிணைந்த ஓய்வூதித் திட்டத்தின் முக்கிய அம்சங்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கும் இதற்கும் உள்ள வேறுபாடுகள் மற்றும் இந்தியாவின் பொருளாதாரத்தில் இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பவை குறித்துப் பார்ப்போம்.

பொருளாதார விவேகத்துடன் கூடிய ஓய்வூதியத் திட்டம்:

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்பது இந்தியாவில் வலுவான ஓய்வூதிய முறைக்கான தேவையின் பிரதிபலிப்பாகும். காங்கிரஸ் கட்சி முன்வைத்த பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) போலல்லாமல், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS)  கடந்த காலத்தில் மாநில அரசுகளைப் பாதித்த நிதி நெருக்கடிகளைத் தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் பல்வேறு மாநில அரசாங்கங்களால் செயல்படுத்தப்பட்டது. இறுதியில் நிதி திவால்நிலைக்கு வழிவகுத்தது. மாநிலங்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற போராடின.

பழைய ஓய்வூதியத் திட்டம் வரையறுக்கப்பட்ட பலன்களை மட்டுமே கொடுத்தது. இது நிலைத்தன்மைக்கு போதுமான ஏற்பாடுகள் இல்லாமல் அரசாங்கத்தின் மீது பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தியது. காலப்போக்கில், 1980கள், 1990கள் மற்றும் 2000களின் முற்பகுதியில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களின்போது, மாநில அரசாங்கங்கள் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவது, நலத் திட்டங்களுக்கு நிதியளிப்பது அல்லது உள்கட்டமைப்புப் பிரச்சினைகளில் முதலீடு செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டன.

மாறாக, யுபிஎஸ் நல்ல பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. திவால்நிலையை நோக்கித் தள்ளாமல் ஓய்வூதியங்கள் பாதுகாப்பாக இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் ஒரு சமநிலையான அணுகுமுறையை இது வழங்குகிறது. இதன்மூலம் சமூக நலன் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற முக்கியமான விவகாரங்களில் சமரசம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்கிறது.

அள்ள அள்ளப் பணம்... 5 வருட பிக்ஸட் டெபாசிட்டில் தாராளமான வட்டி கொடுக்கும் வங்கிகள்!

யு-டர்ன் அல்ல, விமர்சனங்களுக்கான பதில்:

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. குறிப்பாக காங்கிரஸ் கட்சி, ஓய்வூதிய சீர்திருத்தங்கள் குறித்த முந்தைய நிலைப்பாட்டில் இருந்து மத்திய அரசு பின்வாங்கிவிட்டது எனக் குற்றம் சாட்டுகிறது. UPS எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள 'U' என்பது அரசாங்கத்தின் யூ-டர்ன் ('U-turn') என்று சாடியுள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த கூற்றுக்களை மறுத்துள்ளார். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்பது தேசிய ஓய்வூதிய முறையை (என்பிஎஸ்) திரும்பப் பெறுவது அல்லது பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குத் திரும்புவது அல்ல என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மாறாக, இது கொள்கையின் புதிய பரிணாமத்தைப் பிரதிபலிக்கிறது என்றும் ஊழியர்களின் தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதும் என்றும் தெரிவித்துள்ளார்.

நிர்மால சீதாராமன் விளக்கியது போல், இத்திட்டம் புதிய மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டங்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் நலன்கள் மற்றும் அரசாங்கத்தின் நிதி ஸ்திரத்தன்மையை சமநிலைப்படுத்தும் வகையில் உள்ளது. அதனால்தான் புதிய பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இது வெறும் புதிய பெயர் வைத்து அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் அல்ல, உண்மையான புதிய அணுகுமுறையைக் கொண்டுள்ளது.

வாகனங்களுக்கு ஃபேன்ஸி நம்பர் பிளேட் வாங்குவது எப்படி? முழு விவரம் இதோ...

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் முக்கியத்துவம் என்ன?

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் இந்தியாவைப் போன்ற பெரிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாட்டிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நிதிநிலையில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் அதே வேளையில், அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பான ஓய்வூதியத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நீண்ட கால நிலைத்தன்மையைக் கருத்தில் கொள்ளாமல் நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளித்த பழைய அல்லது புதிய ஓய்வூதியத் திட்டங்கள், அதிக அபாயத்தைக் கொண்டிருந்தன. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அதுபோலல்லாமல், ஒரு சமநிலையை அடைய முயல்கிறது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஊழியர்களும் அரசாங்கமும் ஓய்வூதிய நிதிக்கு பங்களிக்கின்றனர். பின்னர் வருமானத்தை உருவாக்க முதலீடு செய்யப்படுகிறது. இத்திட்டம் பணியாளர்கள் ஓய்வு பெற்றவுடன் நியாயமான ஓய்வூதியத்தைப் பெறுவதை உறுதிசெய்கிறது. இந்த அணுகுமுறை மோடி அரசாங்கத்தின் பரந்த பொருளாதார மூலோபாயத்துடன் ஒத்துப்போகிறது. நிதி உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மையில் கவனம் செலுத்துகிறது.

இந்தியாவின் பரந்த மற்றும் மாறுபட்ட மக்கள்தொகைக்கு நெகிழ்வான மற்றும் நம்பகமான ஓய்வூதிய அமைப்பு தேவைப்படுகிறது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு, ஓய்வு பெற்றவர்களின் நலன்களைப் பாதுகாக்கிறது. சமூக நலத் தேவைகளை நிவர்த்தி செய்யும் அதே வேளையில் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதிலும் உறுதியாக உள்ளது.

நலத்திட்டங்களை நிறைவேற்றுதல்:

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் பல ஆண்டுகளாக மோடி அரசாங்கம் செயல்படுத்திவரும் மக்கள் நலத் திட்டங்களின் ஒரு பகுதியாகும். பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) திட்டம் வங்கி இல்லாதவர்களுக்கு வங்கி சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) ஏழைகளுக்கு மலிவு விலையில் வீடுகள் கட்டுவதில் கவனம் செலுத்துகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டம், மக்களுக்கு சுகாதார காப்பீட்டை வழங்குகிறது. இவை அனைத்தும் இந்திய மக்களின் பாதுகாப்புக்குப் பங்களிக்கின்றன.

இத்திட்டங்களுடன் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமும் இணைகிறது. இது சமூகப் பாதுகாப்பிற்கான என்டிஏ அரசின் அணுகுமுறையை எடுத்துக்காட்டுகிறது. குடிமக்களுக்கு அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கத் தேவையான ஆதாரங்களை வழங்கி, அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. குறிப்பாக, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியம் பாதுகாப்பாக இருப்பதையும், மாநிலங்கள் பொருளாதார ரீதியாக லாபகரமாக இருப்பதையும் உறுதி செய்கிறது.

ரயிலில் பயணிகள் எத்தனை மதுபாட்டில் கொண்டு செல்ல அனுமதி? ரயில்வே விதிமுறை என்ன?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios