ரயிலில் பயணிகள் எத்தனை மதுபாட்டில் கொண்டு செல்ல அனுமதி? ரயில்வே விதிமுறை என்ன?
ரயிலில் மது அனுமதிக்கப்படுகிறதா? அப்படியானால் எத்தனை பாட்டில்களை எடுத்துச் செல்லலாம்? 1989 ரயில்வே சட்டம் என்ன சொல்கிறது? முழு விவரம் இதோ.
இந்திய ரயில்வேயில் பயணம் செய்யும் போது சில விதிகளை பின்பற்ற வேண்டும். ரயிலில் சில பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இதில், ரயிலில் மதுவை எடுத்துச் செல்ல அனுமதி உள்ளதா என்பது பலரது கேள்வி.
1989 ஆம் ஆண்டின் இந்திய ரயில்வே சட்டம் அதிகபட்சமாக 2 லிட்டர் மதுபானங்களை ரயில்களில் கொண்டு செல்ல அனுமதிப்பதாக பலர் வாதிடுகின்றனர். ஆனால் உண்மையில் 2 லிட்டர் மதுபானம் கொண்டு செல்ல அனுமதி உள்ளதா?
இந்திய ரயில்களில் மதுவை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மது தீப்பிடிக்க வாய்ப்பு அதிகம் உள்ள பொருள். எனவே, ரயிலில் ஒரு சொட்டு மதுபானம்கூட கொண்டு செல்ல அனுமதி இல்லை.
சீல் வைக்கப்பட்ட பாட்டிலாக இருந்தாலும் இந்திய ரயில்களில் பயணிகள் மதுவை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. விதிகளை மீறினால் கடுமையான அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
ரயிலில் மதுபாட்டில் அல்லது மதுபானத்துடன் பிடிபட்டால் குறைந்தது 1,000 ரூபாய் அபராதமும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.
Gas cylinder
மது மட்டுமின்றி, அடுப்புகள், கேஸ் சிலிண்டர்கள், எரியக்கூடிய ரசாயனங்கள், அமிலங்கள், கிரீஸ் போன்ற பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சில மெட்ரோ ரயில்களில் 2 லிட்டர் மதுபான விதி பொருந்தும். ஆனால், மது பாட்டில் சீல் வைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். எந்தவொரு பொதுப் போக்குவரத்திலும் மூடி சீலிடப்படாத மதுபானங்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.
சில மெட்ரோ நகரங்களில் மட்டும்தான் சீல் வைக்கப்பட்ட 2 லிட்டர் மதுபானம் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு டெல்லி மெட்ரோவில் சீல் செய்யப்பட்ட மதுவை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.