Asianet News TamilAsianet News Tamil

கனடாவில் 700 இந்தியர்களை நாடு கடத்த நோட்டீஸ்; போலி ஆவணங்கள் மூலம் வந்ததாக குற்றச்சாட்டு

போலி ஆவணங்கள் மூலம் நாட்டுக்குள் வந்ததாகக் குற்றம் சாட்டி, கனடாவில் உள்ள 700 இந்தியர்களை நாடு கடத்த அந்நாட்டு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

700 Indians in Canada face deportation over fake college offer letters
Author
First Published Mar 18, 2023, 8:17 PM IST

கனடாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் சுமார் 700 இந்திய மாணவர்களின் மாணவர் சேர்க்கை கடிதங்கள் போலியானவை எனக் கண்டறியப்பட்டதால், அவர்கள் கனடாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட உள்ளனர். கனடா எல்லைப் பாதுகாப்பு முகமை (CBSA) இதற்கான நோட்டீசை இந்த மாணவர்களுக்கு சமீபத்தில் அனுப்பியுள்ளது.

எல்லைப் பாதுகாப்பு முகமையின் நோட்டீஸைப் பெற்ற மாணவர்களில் ஒருவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமன் சிங் பாத். இவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளபடி, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சுமார் 700 மாணவர்கள் ஜலந்தரில் பிரிஜேஷ் மிஸ்ரா என்பவர் நடத்தும் நிறுவனத்தின் மூலம் கனடாவில் மேற்படிப்புக்காக விண்ணப்பித்துள்ளனர். அதன்படி 2018 முதல் 2022 வரை கனடாவில் தங்கி படிக்க கல்வி விசா வழங்கப்பட்டுள்ளது.

மிஸ்ரா விண்ணபித்த மாணவர்களுக்கு ஹம்பர் கல்லூரி உள்பட கடனாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை கடிதம் பெற்றுத் தந்துள்ளார். கனடா பயணத்திற்கான விமான டிக்கெட்டுகள் மற்றும் பாதுகாப்பு வைப்புத்தொகை ஆகியவை தவிர அனைத்து ஏற்பாடுகளையும் செய்துதர, மாணவர்களிடம் இருந்து ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வசூலித்திருக்கிறார் மிஸ்ரா.

கனடாவின் டொராண்டோ நகருக்குச் சென்ற பிறகு, மாணவர்களுக்கு பிரிஜேஷ் மிஸ்ராவிடமிருந்து போன் வந்திருக்கிறது. அவர்கள் சேர இருந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார். மேலும், அடுத்த செமஸ்டர் வரும் வரை ஆறு மாதங்கள் காத்திருந்து அப்போது இடம் கிடைக்கிறதா என்று பார்க்கலாம்; அல்லது கனடாவிலேயே வேறு கல்லூரிகளில் சேர்ந்துகொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்கர் மேடையில் அவமதிப்பு! ஆவணப்பட தயாரிப்பாளர் குனீத் மோங்கா வேதனை

700 Indians in Canada face deportation over fake college offer letters

பின்னர், மாணவர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க ஹம்பர் கல்லூரியில் சேர இருந்த மாணவர்களுக்கு கல்லூரிக் கட்டணத்தையும் திருப்பிச் செலுத்திவிட்டார். இதனால் அந்த மாணவர்கள் வேறு கல்லூரிகளில் சேர்ந்து தங்கள் படிப்பை முடித்தனர். பின்னர் அவர்களில் பலருக்கு கனடாவிலேயே நல்ல வேலையும் கிடைத்துள்ளது.

இந்நிலையில் அந்த மாணவர்கள் அண்மையில் கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெற விண்ணப்பித்தபோது தங்களுடைய மாணவர் சேர்க்கை கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர். அவற்றை ஆய்வுக்கு உட்படுத்திய கனடா எல்லைப் பாதுகாப்பு முகமை அவை போலியானவை என்று கண்டுபிடித்தது. இதனால் அந்த மாணவர்கள் மோசடி செய்து கனடாவுக்கு வந்திருப்பதாக குற்றம்சாட்டி, அவர்கள் இந்தியாவுக்குத் திரும்ப நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாதிக்கப்பட்ட இந்தியர்கள் தாங்கள் குற்றம் செய்யவில்லை என்று கூறியும் அதனை கனடா அதிகாரிகள் ஏற்கவில்லை. ஏஜென்ட் மிஸ்ரா தான்ஐ அனைத்து ஆவணங்களையும் போலியாகத் தயாரித்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாததைக் காரணம் காட்டி இந்தியர்களின் கோரிக்கையை நிராகரிக்கின்றனர்.

விசா வழங்கும்போதும் விமான நிலையத்தில் மாணவர்களை நாட்டுக்குள் அனுமதிக்கும்போதும் இதே ஆவணங்களை கனடா அதிகாரிகள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கனடா அரசு தரப்பிலும் தவறு நேர்ந்திருப்பதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். இந்த விவகாரத்தில் கனடாவுக்கான இந்தியத் தூதரகம் நேரடியாகத் தலையிட்டு உதவி செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட இந்தியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Amritpal Singh: பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் கைது; இன்டர்நெட் சேவை முடக்கம்

Follow Us:
Download App:
  • android
  • ios