காதலுக்கு வயதும் இல்லை!பாகிஸ்தானில் 70 வயது முதியவரையும் 19வயது பெண்ணையும் திருமணத்தில் இணைத்த 'வாக்கிங்'
காதல் சாதி,மதம், இனம் என வேறுபாடின்றி யாரையும், எல்லை கடந்து சேர்த்து வைக்கும் சக்தியானது என்பார்கள். காதலுக்கு சமூகத்தின் அங்கீகாரம் தேவையில்லை இரு மனங்களின் ஆங்கீகாரம் இருந்தாலே போதுமானது என காலந்தோறும் பல சம்பவங்கள் உணர்த்துகின்றன.
காதல் சாதி,மதம், இனம் என வேறுபாடின்றி யாரையும், எல்லை கடந்து சேர்த்து வைக்கும் சக்தியானது என்பார்கள். காதலுக்கு சமூகத்தின் அங்கீகாரம் தேவையில்லை இரு மனங்களின் ஆங்கீகாரம் இருந்தாலே போதுமானது என காலந்தோறும் பல சம்பவங்கள் உணர்த்துகின்றன.
அந்த வகையில் பாகிஸ்தானில் ஒரு காதல் ஜோடி வியக்க வைத்துள்ளனர். காதலுக்கு கண்கள் இல்லை என்று சொல்வார்கள், ஆனால், இந்த ஜோடியைப் பார்த்தால் காதலுக்கு வயதும் இல்லை என்று நினைக்கலாம். பாகிஸ்தானில் 70 வயது முதியவரை, அவரின் பேத்தி வயதில் இருக்கும் 19வயது இளம் பெண் திருமணம் செய்துள்ளார்.
பிலிப்பைன்ஸில் பிறந்த உலகின் 800-வது கோடி குழந்தை! 600,700வது கோடி குழந்தை விவரம் தெரியுமா
பாகிஸ்தானில் சயத் பாசித் அலி என்பவர் யூடியூப் நடத்தி வருகிறார். ஏராளமான நேர்காணல்களை தனது யுடியூப் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதிலும் காதல் திருமணங்கள்,புரட்சிகர திருமணங்கள் குறித்து ஏராளமான வீடியோக்களை பதிவிட்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் 70வயது முதியவர், 19வயது இளம் பெண்ணை திருமணம் செய்தது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
லாகூர் நகரைச் சேர்ந்தவர் லியாகத் அலி(வயது 70), அதேநகரைச் சேர்ந்தவர் சுமைல்லா ஆலி(வயது19) இருவரும் காதல் வயப்பட்டு சமீபத்தில் திருமணம் செய்துள்ளதுதான் வைரலாகி வருகிறது.
என்னது பேத்தி வயதில் இருக்கும் பெண்ணையா திருமணம் செய்தாரா என்று கேட்கலாம். ஆனால், மனம் ஒத்துப்போகும்போது அங்கு வயதுக்கு என்ன வேலை என்று காதலுக்கு கண்கள் மட்டுமல்ல, வயதும் தடையில்லை, எந்தவயதிலும் காதல் வரும் என்று இந்த சம்பவம் உணர்த்துகிறது.
100 கோடி இளைஞர்கள் காது கேளாமல் போக ஆபத்து ! ஹெட்போன், இயர்பட் பயன்பாடு குறித்து எச்சரிக்கை
சுமைல்லா பாடும் பாடலைக்கேட்டு காதலில் விழுந்தேன் என்று லியாகத் அலி தெரிவித்துள்ளார்.
சுமைல்லா கூறுகையில் “ காதலில் வயதைப் பார்ப்பது கிடையாது, பார்த்தவுடன் காதல் வந்துவிடும். என்னுடைய இந்த திருமணத்துக்கும், காதலுக்கும் பெற்றோர் எதிர்த்தனர்.
ஆனால், அவர்களை நான் சமாதானம் செய்து இந்த திருமணத்தை முடித்தேன். இவ்வளவு வயது வேறுபாடுள்ளவரை திருமணம் செய்திருக்கிறேன் என்று சமூகம் என்னை கேள்வி கேட்கவோ விமர்சிக்கவோ கூடாது. இது எங்கள் முடிவு, அதற்கு மதிப்பளிக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கை அவர்கள் விருப்பம் போல் வாழ அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்
Russia Putin:ரஷ்ய அதிபர் புதின் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்காமல் ஏன் ஒதுங்கினார்? காரணம் என்ன?
லியாகத் அலி கூறுகையில் “ காதலுக்கு வயது பொருட்டல்ல, அது காரணமும் இல்லை. நான் தினமும் வாக்கிங் செல்வேன். அப்போது சமைல்லாவும் உடன் வருவார். அவரின் பாடலைக் கேட்டு மயங்கிதான் இருவருக்கும் காதல் வந்தது திருமணம் செய்துகொண்டோம் ” எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் சமீபத்தில் 55வயதுள்ள முதியவரை 18வயதுள்ள பெண் ஒருவர் திருமணம் செய்திருந்தார். அந்த ஜோடியையும் யூடியூப்பர் பாசித் அலி நேர்காணல் எடுத்து வெளியிட்டிருந்தார்.
- 18 year old girl marries 55 year old man in pakistan
- 19 year old girl marries 70 year old man
- 19-year-old girl marries 70-year-old baba
- 70 year old man marries 19 year old woman in pakistan
- 70 year old man marries to 20 years girl
- daily pakistan
- old man marries young girl
- pakistan
- pakistan latest
- pakistan latest news
- pakistan latest video
- pakistan news
- pakistan old man married with young girl
- pakistani
- pakistani girls
- pakistani old man married with young girl