வெள்ளக்காடாக மாறிய பிலிப்பைன்ஸ்... நோரு புயலால் 6 பேர் பலி; 52 ஆயிரம் பேர் பாதிப்பு!!

பிலிப்பைன்ஸில் நோரு புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

6 people died due to typhoon Noru in the Philippines

பிலிப்பைன்ஸில் நோரு புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 52 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிலப்பைன்ஸில் வடக்கு பகுதியை நோரு என்ற புயல் நேற்று தாக்கியது. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளி காற்றில் அரோரா, நியூவா எசிஜா ஆகிய இரு மாகாணங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் இந்த புயலில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன.

இதையும் படிங்க: விண்கல் மீது டார்ட் விண்கலம் மோதல்: நாசா ஆய்வில் மிகப்பெரிய வெற்றி!!

இதனால் அரோரா, நியூவா எசிஜா மாகாணங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின. கட்டிடங்களின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. சாலைகளில் வாகனங்கள் உருண்டன. புயலை தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. இதில் அரோரா மற்றும் நியூவா எசிஜா மாகாணங்களில் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாகின. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததை தொடர்ந்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: துப்பாக்கியுடன் பள்ளிக்குள் நுழைந்த மர்ம மனிதன்.. 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி - கொடூர சம்பவம் !

இதுவரை சுமார் 52 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அரோரா மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக மீட்புக்குழுவினர் படகில் சென்று கொண்டிருந்த போது சுவரில் படகு மோதி கவிழ்ந்ததில் 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். புயல், மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன. புயல், மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios