வானில் சென்று கொண்டிருந்த விண்கல்லை விண்கலத்தால் மோதச் செய்து நாசா வெற்றி பெற்றுள்ளது. 

இந்த ஆய்வுக்கு டார்ட் விண்கலம் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விண்கலத்தை வானில் வந்து கொண்டிருந்த டிமோர்பஸ் என்ற விண்கல்லுடன் இன்று அதிகாலை 4.44 மணிக்கு நாசா மோதச் செய்தது. இந்த விண்கல் திடிமோஸ் என்றும் அழைக்கப்படுகிறது. நாசாவின் இந்த ஆய்வு எந்தவித பாதிப்பும் இன்றி துல்லியமாக நடந்து முடிந்தது. மனித குலத்தின் கிரக பாதுகாப்பு இந்த ஆய்வின் மூலம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்கமானது விண்கல்லை சிறிது சிறிதாக உடைத்து, பெரிய கோளான திடிமோஸ்சை அதன் சுற்றுப்பாதையில் இருந்து மாற்றி இருக்கக் கூடும். பூமி மற்றும் விண்வெளியில் இருக்கும் டெலஸ்கோப்கள் இந்த மாற்றத்தின் அளவை கணக்கிடும் என்று நாசா தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த சிறுகோள் பூமியின் மீது மோதாமல் வேறு பாதைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து நாசா நிர்வாகி பில் நெல்சன் கூறி இருக்கும் செய்தியில், ''இது உலகின் முதல் கிரக பாதுகாப்பு சோதனையாகும். வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. பூமியை நோக்கி வரும் விண்கல்களிடம் அல்லது சிறுகோள்களிடம் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதை இந்த சோதனை காட்டுகிறது. இந்த சோதனை நம்பிக்கை அளித்துள்ளது. இந்த சோதனை மூலம், கிரக பாதுகாப்பு ஒரு உலகளாவிய முயற்சி என்பதையும், நமது கிரகத்தை காப்பாற்றுவது மிகவும் சாத்தியம் என்பதையும் நாசா உலகிற்கு காட்டியுள்ளது'' என்றார். 

Scroll to load tweet…

டிமோர்பஸ் என்ற சிறுகோள் அல்லது விண்கல் அளவில் கால்பந்து ஸ்டேடியம் அளவிற்கு இருந்துள்ளது. பூமியில் இருந்து 6.8 மில்லியன் மைல்ஸ் தொலைவில் இந்த சிறுகோள் வந்து கொண்டு இருந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் டார்ட் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணுக்கு அனுப்ப்பட்ட டார்ட் விண்கலம் தனது இலக்கான சிறுகோளின் மீது திட்டமிட்டபடி இன்று மோதியது. இதன் மூலம் அந்த விண்கல் திசை மாறியதா, எவ்வளவு தொலைவிற்கு தள்ளப்பட்டது அல்லது நொறுங்கியதா என்பது குறித்த விவரங்கள் வரும் நாட்களில் தெரிய வரும்.

பணியாளர் தேர்வு ஆணையம் (SSC)-யில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

10 யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை... தவறான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் மத்திய அரசு அதிரடி!!