Asianet News TamilAsianet News Tamil

10 யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை... தவறான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் மத்திய அரசு அதிரடி!!

தவறான தகவல்களை பரப்பியதற்காக 10 யூடியூப் சேனல்களில் இருந்து 45 யூடியூப் வீடியோக்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. 

action taken against 10 youtube channels on the charge of spreading wrong information
Author
First Published Sep 26, 2022, 11:16 PM IST

தவறான தகவல்களை பரப்பியதற்காக 10 யூடியூப் சேனல்களில் இருந்து 45 யூடியூப் வீடியோக்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. யூடியூப், பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் தவறான தகவல்கள் மற்றும் செய்திகளால் நாட்டின் இறையான்மை பாதிக்கப்படுவதோடு, மக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பம் ஏற்படுகிறது. சமூக வலைதளங்களில் பலர் தனியாக யூடியூப் சேனல்கள் தொடங்கி தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பணியாளர் தேர்வு ஆணையம் (SSC)-யில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

சிலர் அரசுக்கு எதிராகவும், நாட்டை சீர்குலைக்கும் வகையிலும் சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வருவதால் தேவையில்லான பிரச்சினைகள் உண்டாகிறாது. மேலும் போலியான செய்திகளையும் வெளியிட்டு வருவதால் பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பம் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான செய்திகளை பரப்பியதற்காக 10 யூடியூப் சேனல்களில் இருந்து 45 வீடியோக்களை ம்த்திய அரசு முடக்கியுள்ளது.

இதையும் படிங்க: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 1,535 காலி பணியிடங்கள்.. யாரெல்லாம் தகுதி..? எப்படி விண்ணப்பது..? விவரம் உள்ளே

முடக்கப்பட்டுள்ள இந்த வீடியோக்களை 1 கோடியே 30 லட்சத்திற்கும் அதிகமானோர் ஏற்கனவே பார்த்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முடக்கப்பட்ட வீடியோகளில் மத சமூகங்களிடையே வெறுப்புணர்வை பரப்பும் நோக்கத்துடன் பரப்பப்பட்ட போலிச் செய்தி வீடியோக்கள் மற்றும் மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்களும் அடங்கும் என தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தவறான தகவல்களை பரப்பியதற்காக கடந்த டிசம்பர் மாதம் 100க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios