துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பித்த 42,000 இஸ்ரேல் பெண்கள்! 10,000 பேருக்கு பயிற்சி!
2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு துப்பாக்கி உரிமம் பெறுவதற்காக 42,000 பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவர்களில் 18,000 பேருக்கு துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் பயங்கரவாத குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பிக்கும் இஸ்ரேலிய பெண்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பெண்ணிய அமைப்புகள் இந்தப் போக்கிற்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்படி, அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு துப்பாக்கி உரிமம் பெறுவதற்காக 42,000 பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவர்களில் 18,000 பேருக்கு துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது. இது இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு முந்தைய எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
இஸ்ரேலின் வலதுசாரி அரசு துப்பாக்கி பயன்பாட்டுக்கான சட்டங்களை தளர்த்தியது. அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் இதமர் பென் ஜிவிர் இதில் முக்கியப் பங்கு வகித்தார். இதன் எதிரொலியாக துப்பாக்கி கோருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க சூப்பர் சான்ஸ்! 5 நாள் மட்டும் ஸ்பெஷல் ஆஃபர் கொடுக்கும் ஓலா!
இப்போது இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் பிடியில் உள்ள பாலஸ்தீன பகுதிகளில் 15,000 க்கும் மேற்பட்ட பெண்கள் துப்பாக்கி வைத்துள்ளனர். இதில் 10,000 பேர் கட்டாய துப்பாக்கிப் பயிற்சியில் சேர்ந்துள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ள ஒரு இஸ்ரேலிய பெண்,"துப்பாக்கி வாங்குவது பற்றி நான் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டேன். ஆனால் அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தொடங்குவதற்குக் காரணதமாக இருந்த அக்டோபர் 7 தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த 1,194 பேர் கொல்லப்பட்டனர். பலியானவர்களில் பெரும்பாலனவர்கள் அப்பாவிப் பொதுமக்கள் என இஸ்ரேல் கூறுகிறது. இதற்கு பழிவாங்கும் வகையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் குறைந்தது 37,431 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் சொல்கிறது.
20 ஆயிரம் பட்ஜெட்டில் செம ஸ்மார்ட்போன் வாங்கணுமா? இதைப் பார்த்துட்டு செலக்ட் பண்ணுங்க!