ஒரே ஒரு அப்பார்ட்மெண்ட்! ஆனா 30 ஆயிரம் பேர் வசிக்கிறாங்க.. எங்க தெரியுமா..?

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தில் தற்போது 30,000 பேர் வசித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்ட இந்த கட்டிடத்தின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
 

30 thousand people live in this single apartment residential building in china  hangzhous regent international apartment in tamil mks

பொதுவாகவே, பெரிய பெரிய நகரங்களில் பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாகவே இருக்கும். அந்தவகையில், ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த கட்டிடம் சீனாவின் ஹாங்சோ என்ற இடத்தில் அமைந்துள்ளது. அந்த கட்டிடத்தின் பெயர், 'The Regent International Apartment' ஆகும். புகழ்பெற்ற சிங்கப்பூர் சாண்ட்ஸ் ஹோட்டலின் வடிவமைப்பாளரான அலிசியா லூ என்பவர் தான் இந்த கட்டிடத்தை வடிவமைத்தார். 

இந்த பிரமாண்டமான கட்டிடம் முதலில் சொகுசு ஹோட்டல் கட்டுவதற்காக தான் கட்டப்பட்டது. பிறகு, அது அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றப்பட்டது. மேலும் இந்த கட்டிடம் S வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2013 ல் திறக்கப்பட்ட இந்த The Regent International Apartment, சுமார் 39 மாடிகளைக் கொண்டுள்ளது. இதன் உயரம் சராசரியாக, 206 மீட்டர் ஆகும். அப்போது, இந்த கட்டிடத்தில் இருபதாயிரம் பேர் வாழ்ந்தனர். ஆனால், இப்போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கட்டிடத்தில் வசிப்பவர்களின் எண்ணிக்கையானது 30 ஆயிரத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:  மகிழ்ச்சியா இல்லையா? லீவு எடுத்துக்கோங்க... ஊழியர்களுக்கு ராஜ மரியாதை கொடுக்கும் நிறுவனம்!

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சின்ன அறைக்கான மாத வாடகை மாதம் 220 டாலர்கள் ஆகும். அதாவது, இந்திய மதிப்பில் ரூ.18 ஆயிரமும், பால்கனி வசதியுடன் கூடிய விசாலமான அறைகளுக்கு மாத வாடகை, 45 ஆயிரம் ஆகும். இங்கு குடியிருப்பவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த ஒரே கட்டிடத்தில் உள்ளது. ஆம்.. இந்த கட்டிடத்திற்கு உள்ளேயே ஃபுட் கோர்ட், நீச்சல் குளம், பார்லர், சூப்பர் மார்கெட், இன்டர்நெட் கஃபே என தேவையான அனைத்து வசதிகளும் இங்கே உள்ளது. இந்த கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 2.6 லட்சம் சதுர மீட்டர் ஆகும். இது சீனாவின் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றாகும்.

இதையும் படிங்க:   நான் சீனாவின் தீவிர ரசிகன்! சீனப் பிரதமரைச் சந்தித்த பின் எலான் மஸ்க் ஓபன் டாக்!

இந்த The Regent International Apartment, திறக்கப்பட்ட அந்த நேரத்தில் இந்த கட்டிடம் மிகவும் பிரபலமான மற்றும் பிரம்மாண்டமான கட்டிடமாக செய்திகளில் இடம் பிடித்தது. அந்த சமயத்தில், இதை பார்க்க ஏராளமானோர் குவிந்தனர். தற்போது, இந்த அடுக்குமாடி குடியிருப்பில், வணிகர்கள், சமூக ஊடகங்களில் செல்வாக்கு உள்ளவர்கள் மற்றும் பலதரப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios