எகிப்தில் உள்ள குரங்கு ஒன்றுக்கு 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ள சம்பவம் ஆச்சரிய த்தை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்து நாட்டில் உள்ள செல்ல பிராணிகளை விற்கும் கடையில் பல செல்லப்பிராணிகள் இருந்துள்ளன. அப்போது அங்கு வந்த ஒரு பெண் கடையில் இருந்த குரங்கு ஒன்றுடன் விளையாடி உள்ளார். அந்த நேரத்தில் குரங்கின் பிறப்புறுப்பை தொட்டு அதனை கிண்டல் செய்யும் விதமாக மீண்டும் மீண்டும் தொட்டு பார்த்துள்ளார். இதனை அருகில் இருந்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் விட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலாக பரவியதை அடுத்து குரங்குக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்தப் பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அந்தப் பெண்ணும் தான் செய்த தவறை ஒப்புக் ஒப்புக்கொண்டுள்ளார் இதனையடுத்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம். இந்த சம்பவம் உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.