Asianet News TamilAsianet News Tamil

nobel prize economics 2022: அமெரிக்க பெடரல்வங்கி முன்னாள் தலைவர் உள்பட 3 அறிஞர்களுக்கு பொருளாதார நோபல் பரிசு

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் பென் எஸ் பெர்னான்கே மற்றும் மற்ற இரு அமெரிக்க பொருளாதார அறிஞர்களுக்கு 2022ம் ஆண்டுக்குரிய பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

3 US economists receive honours for nobel prize in economics
Author
First Published Oct 10, 2022, 4:55 PM IST

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் பென் எஸ் பெர்னான்கே மற்றும் மற்ற இரு அமெரிக்க பொருளாதார அறிஞர்களுக்கு 2022ம் ஆண்டுக்குரிய பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல், இலக்கியம், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், வேதியியல் உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த நிதி ஆண்டுக்கான(2023-24) பட்ஜெட் தயாரிப்பு பணியை தொடங்கியது மத்திய அரசு

கடந்த வாரம் திங்கள்கிழமை முதல் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதிக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் இன்று (10ம்தேதி) பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரி்க்க பெடரல் வங்கியின் முன்னாள் தலைவர் பென் எஸ் பெர்னான்கே, அமெரிக்க பொருளாதார அறிஞர்கள் டக்லஸ் டபிள்யு.டைமண்ட், பிலிப் ஹெச்.டைவிக் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

அமைதிக்கான நோபல் பரிசு - உக்ரைன், ரஷ்யா, பெலாரஸ் நாடுகளை மையப்படுத்தி அறிவிப்பு

 

இவர்கள் மூவரும் வங்கிகள் குறித்தும், நிதிச்சிக்கல் குறித்தும் ஆய்வு செய்துள்ளனர். வங்கிச்சீர்குலைவு வராமல் எவ்வாறு தடுக்கலாம் என்ற அடிப்படையில் 3வல்லுநர்களும் ஆய்வு செய்தனர். குறிப்பாக வங்கிகள் ஏன் உள்ளன, சமூகத்தில் அதன்  பங்கு என்ன, சரிவு என்ற வதந்தியால் வங்கிகள் எவ்வாறு  பாதிப்படையும், அந்த பாதிப்பிலிருந்து எவ்வாறு குறைக்க முடியும் என்று ஆய்வு செய்தனர். 

3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

கடந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு என்பது, குறைந்தபட்ச ஊதியம், குடியேற்றம், கல்வி ஆகியவற்றில் தொழிலாளர் சந்தை விளைவுகளைப் பகுப்பாய்வு செய்ததற்காக வழங்கப்பட்டது.
 கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர்களுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. டேவிட் கார்ட், ஜோஸ்வா டி.அங்ரிஸ்ட், கொய்டோ டபுள்யு இம்பென்ஸ் ஆகியோருக்குப் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios