போரிஸ் அமைச்சரவையில் 3 இந்தியர்களுக்கு பதவி... பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளருக்கு முக்கிய பொறுப்பு..!
இங்கிலாந்தில் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் 3 பேர் இடம்பெற்றுள்ளனர். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை அமைச்சராக பதவியை பிரீத்திபடேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் 3 பேர் இடம்பெற்றுள்ளனர். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை அமைச்சராக பதவியை பிரீத்திபடேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் நேற்று முன்தினம் பதவியேற்றார். தனது அமைச்சரவையை அவர் நேற்று அறிவித்துள்ளார். பல்வேறு நாடுகள் மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்த அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இதில் 3 இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர்.
அதில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பீரித்தி பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச மேம்பாட்டு அமைச்சராக அலோக் சர்மா, கருவூலத் துறை தலைமை அமைச்சராக ரிஷி சுனாக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். இங்கிலாந்தில் உள்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் பதவியேற்பது இதுதான் முதல் முறை. இவரது பெற்றோர் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்டவர்கள். ஜூனியர் அமைச்சர் உட்பட பல்வேறு பதவிகளை இவர் ஏற்கனவே வகித்து வந்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெறும் அனைத்து இந்திய வம்சாவளியினருக்கான விழாக்களிலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்பவர். மேலும், பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர். அதேபோல், ரிஷி சுஷாங்க் 39 கருவூலத் துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். லண்டனில் பிறந்த இவர் இந்தியாவின் மிகப் பெரிய கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிக்கும் இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயண மூர்த்தியின் மகள் அக் ஷதாவை மணந்துள்ளார். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் புகழ்பெற்ற முதலீட்டு ஆலோசகராக உள்ளார்.
இவர் ஏற்கனவே ஜூனியர் அமைச்சராக இருந்தவர். இதேபோல், அலோக் சர்மா ஏற்கனவே வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருந்தார். தற்போது சர்வதேச மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.