விமான கழிவறையில் 22 வயது பெண்.. நாக்கால் நக்கி வீடியோ..!! கேடுகெட்ட செயல் என கண்டனம்..!!
கழிவறையை இரண்டுமுறை தனது நாக்கினால் நக்குகிறார் அதனுடன் தயவுசெய்து இந்த வீடியோவை பகிருங்கள் விமானத்தில் எவ்வாறு சுகாதாரமாக இருக்கவேண்டும் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள் என அதில் பதிவிட்டுள்ளார் .
கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் , விமான கழிவறையை நாவால் நக்கி இளம் பெண் ஒருவர் சவால் வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது . கொரோனா வைரஸ் பீதியில் உலகமே நடுநடுங்கி வருகிறது. உலக அளவில் இந்த வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது . இந்நிலையில் பல்வேறு நாடுகள் வைரஸில் இருந்து தப்பிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இளம்பெண் ஒருவர் சவாலாக விமானத்தின் கழிவறையை நாவால் நக்கி வீடியோ வெளியிட்டுள்ளார். ஒருபுறம் கொரோனாவுக்கு மக்கள் அஞ்சி வரும் நிலையில் ,
சிலர் இதையும் டிக் டாக் வீடியோவாக வெளியிட்டு பொழுதுபோக்காகி வருகின்றனர் அந்த வகையில் டிக்டாக்கில் கொரோனா வைரஸ் சவால் என்ற பெயரில் மியான்மரை சேர்ந்த அவா லூயிஸ் (22) என்ற பெண் , டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டுள்ளார். சுமார் 6 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவை கடந்த சனிக்கிழமை அன்று அவர் வெளியிட்டுள்ளார், அதில் விமானத்தில் உள்ள கழிவறையின் முன் அமர்ந்திருக்கும் அந்த பெண், கழிவறையை இரண்டுமுறை தனது நாக்கினால் நக்குகிறார் அதனுடன் தயவுசெய்து இந்த வீடியோவை பகிருங்கள் விமானத்தில் எவ்வாறு சுகாதாரமாக இருக்கவேண்டும் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள் என அதில் பதிவிட்டுள்ளார் .
அந்தப் பெண்ணின் வீடியோவை இதுவரை 2 லட்சத்து 93 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர் . இந்த சர்ச்சைக்குரிய வீடியோ டிக்டாக்கில் இருந்து அகற்றப்பட்டுள்ளது . ஆனால் ட்விட்டரில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த பெண்ணின் வீடியோவிற்கு சிலர் ஆதரவும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் , இது முகம் சுளிக்க வைப்பதாக உள்ளது என பவர் விமர்சித்து வருகின்றனர். அதேபோல் அந்த பெண் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிலர் பதிவிட்டுள்ளார். ஆனால் மக்களிடம் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்ந வீடியோ உள்ளதாகவும் பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.