இந்த ஆண்டு இறுதியில் ஐரோப்பாவில் கடும் வெப்பத்தினால் வருடத்திற்கு 1.5 லட்சம் பேர் மரணிக்கும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மூன்று ஐரோப்பியர்களில் ஒருவர் வெப்பத்தினால் இறக்கும் அபாயம் ஏற்படக்கூடும் என்றும், இதைத் தடுக்க பசுமை இல்ல வாயுக்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

புவி வெப்பமடைவதால் பருவ மாறுதல்கள் உண்டாகி மனிதர்களுக்கு பெரும் உடல்நலத்தீங்கினை ஏற்படுத்தும் என்கிறார் இத்தாலியைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர். நிலைமை சரியாகாவிட்டால் 350 மில்லியன் ஐரோப்பியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள். 

இயற்கை மாற்றம் நிகழ்ந்தால் ஏழு வகையான பாதிப்புகள் ஏற்படும் அவை வெப்பக்காற்றலைகள், குளிர் அலைகள், காட்டுத்தீ, வறட்சி, வெள்ளம் மற்றும் புயல்காற்று  ஆகியனவாகும். வெப்பக் காற்றே இதர வகையான பாதிப்புகளை விட அதிகமாக ஐரோப்பாவை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. 

ஆகையால் பருவகால மாற்றமே 90 சதவீத சிக்கல்களுக்கு காரணமாகப் போகிறது என்று அறிஞர்கள் தெளிவாக்கியுள்ளனர்.