விமானம் ஆற்றில் விழுந்து விபத்து... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 136 பயணிகள்..!
அமெரிக்காவில் 136 பயணிகளுடன் சென்ற விமானம் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அமெரிக்காவில் 136 பயணிகளுடன் சென்ற விமானம் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
புளோரிடாவில் ஜாக்சன்வேலி பகுதியில் 136 பயணிகளுடன் சென்ற போயிங் 737 ரக விமானம், தரையிறங்கும் போது நிலை தடுமாறி அருகில் உருந்த செயிண்ட் ஜான்ஸ் ஆற்றில் பாய்ந்தது. இதில் காயங்கள் ஏதுமின்றி 136 பயணிகள் உயிர் தப்பினர். இந்த ஆற்றின் முடிவில் விமான நிலைய ரன்வே துவங்குகிறது. இதனால் தரையிறங்கும் போது நிலை தடுமாறி விமானம் ஆற்றில் இறங்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஜாக்சன்வேலி மேயர் கூறுகையில் விமானத்தில் பயணித்த அனைவரும் நலமாக உள்ளனர். ஆழமற்ற பகுதியில் விமானம் பாய்ந்தது. இதனால், விமானம் நீரில் மூழ்கவில்லை. ஆற்று நீரில் விமான எரிபொருள் கலப்பதை தடுக்கும் பணியில் விமானநிலைய பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அத்துடன் விபத்திற்குள்ளான விமானத்தின் 2 போட்டோக்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.