உலக நாடுகளின் காப்பானான இந்தியா... பாரத தேசத்திடம் கையேந்தி நிற்கும் 13 நாடுகள்...!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிடம் 13 நாடுகள் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை கேட்டு வருகின்றன.
13 nations to get anti-malarial drug from india
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிடம் 13 நாடுகள் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை கேட்டு வருகின்றன.

அமெரிக்காவைத் தொடர்ந்து ஸ்பெயின், ஜெர்மன், இலங்கை, பஹ்ரைன், நேபாளம், பிரேசில், பூடான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, வங்கதேசம் ஆகிய நாடுகளும் இந்தியாவிடம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை கேட்டுள்ளன.13 nations to get anti-malarial drug from india

இந்தியாவிடம் அமெரிக்கா 48 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை கேட்டு இருந்த நிலையில், 35.82 லட்சம் மாத்திரைகளை மட்டும் இந்தியா வழங்கி இருந்தது. மலேரியாவுக்கு கொடுக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை கொரோனாவுக்கும் கொடுக்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தி இருந்தது.

இதையடுத்து இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து வழங்கப்படுகிறது. முழு நிவாரணம் அளிக்காவிட்டாலும், குறிப்பிடத்தக்க பலன் அளிக்கிறது என்று தெரிவித்து இருந்தது. இதையடுத்து அமெரிக்காவும் இந்தியாவை மிரட்டி இந்த மருந்தை வாங்கி இருந்தது. அடுத்தது பிரேசில், கனடாவுக்கும் இந்த மாத்திரை அனுப்பப்பட இருக்கிறது. இருநாடுகளுக்கும் 50 லட்சம் மாத்திரைகளை அனுப்ப இந்தியா முன் வந்துள்ளது. முதலில் பிரேசிலுக்கு அனுப்புகிறது.13 nations to get anti-malarial drug from india

இதையடுத்து வங்கதேசத்திற்கு 20 லட்சம், நேபாளத்திற்கு 10 லட்சம், பூடானுக்கு 2 லட்சம், இலங்கைக்கு 10 லட்சம், ஆப்கானிஸ்தானுக்கு 5 லட்சம், மாலத்தீவுக்கு 2 லட்சம் அனுப்ப முடிவு செய்துள்ளது. ஜெர்மனுக்கு 50 லட்சம் மாத்திரைகள் அனுப்பப்படுகிறது. டொமினிக் குடியரசு, சிசல்ஸ் ஆகிய நாடுகளும் மாத்திரைகள் கேட்டுள்ளன.13 nations to get anti-malarial drug from india

மொத்தமாக இந்தியா 14 மில்லியன் மாத்திரைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப இருக்கிறது. ஏற்கனவே தங்களுக்கு மாத்திரைகள் அனுப்பியதற்காக இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நன்றி தெரிவித்து இருந்தனர். 
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios