அவசர அவசரமாய் கரை ஒதுங்கும் திமிங்கலம்....! பீதியை கிளப்பும் ஆடியோவும் வீடியோவும்..!
அவசர அவசரமாய் கரை ஒதுங்கும் திமிங்கலம்....! பீதியை கிளப்பும் ஆடியோவும் வீடியோவும்..!
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் ஏதாவது ஒரு சோக நிகழ்வு நடந்துக்கொண்டே இருக்கிறது.
அதனை பிரதிபலிக்கும் விதமாக சில பஞ்சாங்கங்களும், இலங்கையில் திடீரென கிணற்றில் தண்ணீர் வற்றியதும், பின்னர் தொடர்ச்சியாக பனிக்கட்டி உருகுவதால் கடல் நீர் மட்டம் உயர்ந்து உலகில் உள்ள சில நகரங்கள் மூழ்கி போகும் நிலை உள்ளது என நாசா வெளியிட்டதாக வெளிவந்த செய்தி.....
இதற்கு அடுத்தபடியாக சென்னையை பொறுத்தவரை 2100 ஆம் ஆண்டு வேளச்சேரி பெருங்குடி , எண்ணூர் உள்ளிட்ட சில பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது என இஸ்ரோ இன்று ஆய்வறிக்கை வெளியிட்டது...
இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவி வரும் வைரல் வீடியோ மற்றும் ஆடியோவால் மக்கள் பெரிதும் பீதி அடைந்துள்ளனர்
காரணம்
அவசர அவசரமாக 12 திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உள்ளதே..சிங்கப்பூர் மலேசியா கடற்கரையில் தற்போது கடலின் ஆழ்பகுதியில் இருக்கக்கூடிய திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
இது குறித்த ஆடியோ மற்றும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
ஆடியோவாய்ஸ் சொன்னது என்ன ?
நவம்பர் 17 மற்றும் 19 தேதிக்குள்ளும், 23 முதல் 29 ஆம் தேதிக்குள்ளும் ஏதோ ஒன்று நிகழ உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்பதை நிரூபிக்கும் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாக வில்லை ....அதே சமயத்தில் செய்தி தொலைகாட்சியிலும் வெளிவரவில்லை
சமூக வலைதளங்களில் மட்டுமே குறிப்பாக வாட்ஸ் ஆப் மூலம் அதிவேகமாக பரவி வரும் இந்த செய்தியால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்
காரணம் , அதில் பேசும் நபர் தமிழில் தெரிவித்துள்ளார்...முன்னெச்சரிக்கையாக இருங்கள் என்றும் அயல்நாட்டிலிருந்து பேசுவதாகவும் உள்ளது ...
இதனால் சுனாமி வருவதற்கு முன் இது போன்ற நிகழ்வுகள் நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால், நடுக்கடலில் ஏதோ ஒரு மாற்றம் இருப்பதனால் தான்,திமிங்கலம் கரை ஒதுங்கி உள்ளது என்றும் ....ஒருவேளை சுனாமி அறிகுறி தான் இருக்குமோ என மக்கள் அஞ்சுகின்றனர்
எனவே இது குறித்த உண்மை வெளிவரும் தருவாயில் இதை நம்பலாம்....அதுவரை மக்கள் யாரும் பீதி அடையாமல் இருப்பதே நல்லது .....