10 Downing Street London: மிஸ்டர் ரிஷி சுனக், 10 டவுனிங் தெரு, லண்டன் : அறிந்திறாத தகவல்கள், சிறப்புகள் என்ன?

கிபி.43-ல் ரோமானியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட நகரம்தான் லண்டனம். பிற்காலத்தில் சூரியன் ஆட்சியில் மறையாது என்று மார்தட்டிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தலைமை நகராகமாக மாறியது.

10 Downing Street, London Rishi Sunak: What is it? Unknown details, what are the features

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானாலும் இன்னும் பழமை மாறாமல், புதுமை சிறப்பு குறையாமல் இருக்கிறது லண்டன் மாநகரம். 

கிபி.43-ல் ரோமானியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட நகரம்தான் லண்டனம். பிற்காலத்தில் சூரியன் ஆட்சியில் மறையாது என்று மார்தட்டிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தலைமை நகராகமாக மாறியது.

பாரம்பரிய நகரம்

லண்டன் நகரின் பழமையான சிறப்புகளைக் கூறிக்கொண்டே செல்லலாம். பிரிட்டன் ஐரோப்பிய இலக்கியம், பொருளாதாரம், அரசியல், நாகரீகம், பாரம்பரியம், தேம்ஸ் நதி என திகட்டாத வரலாற்று தகவல்களை பொதிந்து வைத்துள்ளது.

அதில் முக்கியமானது, அனைவரையும் கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது 10, டவுனிங் ஸ்ட்ரீட்(தெரு). லண்டன் அரசு அலுவலகங்கள் அனைத்தும் வெஸ்ட்மினிஸ்டர்ஸ் பகுதியில் உள்ள நாடாளுமன்றத்தைச் சுற்றியே அமைந்துள்ளன.

10 Downing Street, London Rishi Sunak: What is it? Unknown details, what are the features

300 ஆண்டுகள் பழமை

வெஸ்ட்மினிஸ்டர் நகரில்,  10, டவுனிங் தெரு என்பது பிரிட்டனின் பிரதமர் வசிக்கும் அதிகாரப்பூர்வ இல்லமாகும். 300 ஆண்டுகள் பழமையான இல்லத்தில் பிரதமர் அலுவலகம், அமைச்சரவைக் கூட்டம் நடக்கும் இடம், வெளிநாட்டு தலைவர்களைச் சந்திக்கும் அறை, அவசரக்கூட்ட அரங்கு என 100க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.

10, டவுனிங் தெரு இல்லத்தின் கதவுகளே பிரம்மாண்டமான முறையில் ஓக் மரத்தால், பிரி்ட்டன் கொடி வடிவத்தை தாங்கி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், 1991ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் இந்த கதவு சேதமடைந்தது. இதையடுத்து, கதவு மாற்றப்பட்டு அதே மரத்தில் அதே வடிவத்தில், குண்டு துளைக்காத கதவு அமைக்கப்பட்டது.

பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தின் மட்டும் அரை ஏக்கருக்கு பூங்கா அமைந்துள்ளது. இந்த 10 டவுனிங் தெருக்கு அருகேதான் இங்கிலாந்து நாடாளுமன்றமும், பிரிட்டன் ராணியின் அரண்மனையும் அமைந்துள்ளது. 

ஒருங்கிணைப்பட்ட இல்லம்

1732ம் ஆண்டு பிரிட்டனை ஆண்ட மன்னர் ஜார்ஜ், இந்த 10ம் நம்பர் இல்லத்தை சர் ராபர்ட் வால்போலுக்கு பரிசாக அளித்தார். அப்போது 3 இல்லங்களாக இருந்தது. 18 மற்றும் 19ம் நூற்றாண்டு வரை பழமை மாறாமல் இல்லம் இருந்த நிலையில் 1905ம் ஆண்டு 3 வீடுகளும் ஒன்றாக இணைக்கப்பட்டது. அதன்பின் நம்பர் 10 டவுனிங் தெரு என அழைக்கப்பட்டது.

10 Downing Street, London Rishi Sunak: What is it? Unknown details, what are the features

10 டவுனிங் தெரு இல்லம் 300 ஆண்டுகள் பழமையானது என்பதால் பல முறை இடித்து, வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் முக்கிய அறைகள் இன்னும் பழமை மாறாமல் இருக்கின்றன. பிரிட்டன் முன்னாள் பிரதமர் மார்க்ரெட் தட்சர் கூறுகையில் “ இங்கிலாந்தின் விலைமதிக்க முடியாத ரத்தினங்களில் முக்கியமானது 10 டவுனிங்தெரு இல்லம்” எனத் தெரிவித்திருந்தார்.

11 டவுனிங் இல்லம்

10 டவுனிங் தெரு இல்லம் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமாக இருந்தாலும் இதில் பிரதமர் வசிக்க வேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை. இந்த இல்லம் பாரம்பரியமானது, அதே சமயம் சிறியது என்பதால் இதற்கு முன் பதவி வகித்த சில பிரதமர்கள் இங்கு வசிக்கவில்லை.

குறிப்பாக டோனி பிளேர், டேவிட் கேமரூன், போரிஸ் ஜான்ஸன் ஆகியோர் 11, டவுனிங் தெருவில் வசித்தனர். இருப்பினும் நம்பர் 11 இல்லத்தில் உள்ள 50 ஆண்டு பழமையான சமையல் அறையை பிரதமராக இருந்த கேமரூன் மாற்றி அமைத்தார், 

மிகப்பெரிய கதவு

10 டவுனிங் இல்லத்தில் முதலில் வரவேற்பது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மிகப்பெரிய கதவுதான். கறுப்பு ஓக் மரத்தால் செய்யப்பட்ட பிரிட்டன் கொடியை செதுக்கி, கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட கதவுதான். 1991ம் ஆண்டு குண்டுவெடிப்புக்குப்பின் இந்த கதவு மாற்றப்பட்டு, குண்டு துளைக்காத கதவு பொருத்தப்பட்டது. இந்த கதவை குறைந்தபட்சம் 8 பேர் சேர்ந்துதான் பொருத்த முடியும் என்ற அளவுக்கு பிரமாண்டமானது.

அடுத்ததாக பிரதான கல் படிக்கட்டுகள் உள்ளன. 1732 முதல் 1734ம் ஆண்டுவரை வில்லியம் கென்ட் மூலம் இந்த இல்லத்தின் உள்புறம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு 3 படிகட்டுகளாக பிரித்து அமைக்கப்பட்டது. இந்த படிக்கட்டுகள் முன்புதான் உலகத் தலைவர்கள், அமைச்சரவை, அமைச்சர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.

10 Downing Street, London Rishi Sunak: What is it? Unknown details, what are the features

அடுத்ததாக கேபினெட் அறை உள்ளது. இந்த அறை கூட்டம் நடத்த சில பிரதமர்கள் பயன்படுத்தினாலும், டோனி பிளேர், கேமரூன் போன்ற பிரதமர்கள் தங்களின் அதிகாரபூர்வ அலுவலகமாக பயன்படு்த்தினார்கள். விலை உயர்ந்த மரத்தால் அழகாக வடிவமைக்கப்பட்ட நாற்காலிகள், மேஜைகள் இருக்கும். அமைச்சரவை கூட்டம் நடத்தவும் கேபினெட் அறையில் தனியாக இடம் உண்டு

3 விதமான வரவேற்பறைகள்

10 டவுனிங் இல்லத்துக்கு வரும் விருந்தினர்களை வரவேற்க 3 விதமான ட்ராயிங் ரூம்கள் உள்ளன, அதாவது வரவேற்பறைகள் உள்ளன. தூண்களால் அமைக்கப்பட்ட வரவேற்பறை, டெரகோட்டா வரவேற்பறை, வெள்ளை நிற வரவேற்பறை உள்ளன. இந்த 3 வரவேற்பறைகளும் ஒவ்வொரு காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவை. 

 இதில் தூண்களால் அமைக்கப்பட்ட வரவேற்பறைதான் பழமையானது. அடுத்ததாக டெரகோட்டா வரவேற்பறையாகும், இந்த அறையில்தான் விருந்தினர்களை உபசரிக்கவும், விருந்து உண்ண மேஜையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைக்கு மார்க்ரெட் தாட்சர் காலத்தில் ப்ளூரூம் என்ற பெயரும் வைக்கப்பட்டது.

வெள்ளை நிற வரவேற்பறை என்பது, பிரதமர் அவரின் தனிப்பட்ட நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் சந்தித்துப் பேசும் இடமாகும். இந்த வரவேற்பறை அவரின் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ளது.

10 Downing Street, London Rishi Sunak: What is it? Unknown details, what are the features

டைனிங் ஹால்

அடுத்ததாக அதிகமான விருந்தினர்களை ஒரே நேரத்தில் அமர வைத்து விருந்து வைப்பதற்காக பிரத்தியேகமாக டைனிங் ஹால் உள்ளது. நம்பர் 10 டவுனிங் இல்லத்திலேயே மிகப்பெரியது டைனிங் ஹால்தான். இங்கு ஒரே நேரத்தில் 65 பேர் அமர்ந்து உணவு சாப்பிட முடியும். 

பிரதமர் குடும்பத்தினர், விருந்தினர்கள் என அனைவருக்கும் சமைப்பதற்காக மிகப்பெரிய இரு சமையல் அறைகள் 14 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர காலையில் சிற்றுண்டி சாப்பிடுவதற்கு தனியாக டைனிங் ஹாலும் அமைக்கப்பட்டுள்ளது.

மாடிப் பூங்கா

10, 11 டவுனிங் தெரு இல்லங்களை இணைக்கும் வகையில் மாடியில் அரை ஏக்கர் நீளத்துக்கு தோட்டம், பூங்கா அமைக்ககப்பட்டுள்ளது. கடந்த 1736ம் ஆண்டு இந்த மாடிப் பூங்கா அமைக்கப்பட்டு இன்று வரை பராமரிக்கப்பட்டு வருகிறது.

நம்பர் 10 இல்லத்தில் பழமையை பிரதிபலிக்கும் ஏராளமான அம்சங்கள் உள்ளன. புகைப்படங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், நாற்காலி, மேஜைகள், பல நாடுகளின் கலைப்பொருட்கள் அலங்காரமாக வைக்கப்பட்டுள்ளன. நம்பர் 10 இல்லம் கட்டப்பட்டு 250 ஆண்டுகள் நிறைவடைந்த விழா கடந்த 1985ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

10 Downing Street, London Rishi Sunak: What is it? Unknown details, what are the features

அப்போது பிரதமராக இருந்த மார்க்ரெட் தாட்சர் பிரதமர் அலுவலகத்தில் உள்ள அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அனைவருக்கும் விருந்து அளித்தார். நம்பர் 10 இல்லத்தைப் பற்றியும், அதன் சிறப்பு அம்சங்கள், பாரம்பரியங்கள், வரலாற்று சிறப்புகள் குறித்து கிறிஸ்டோபர் ஜோன்ஸ் என்பவர் நம்பர் 10 டவுனிங் ஸ்ட்ரீட் என்ற நூலை எழுதி அப்போது வெளியிட்டார்.

கேபினெட் அலுவலகம்

பிரதமர் அலுவலகம் நம்பர் 10 டவுனிங் இல்லத்தில்தான் அமைந்துள்ளது. பிரதமர் அலுவலக அதிகாரிகள், உயர் அதிகாரிகள், ஆலோசகர்கள், முதன்மை செயலர் உள்ளிட்ட பிரதமர் அலுவலகம் தொடர்பான அனைத்து அதிகாரிகளுக்கும் தனியாக அலுவலகங்களும் உள்ளன. நம்பர் 10 என்பது பொதுவாக கேபினெட் அலுவலகம் என்று அழைக்கப்படுகிறது. 

இந்த நம்பர் 10 டவுனிங் இல்லத்தில்தான் பிரதமர் ரிஷி சுனக்(rishi sunak) குடியேறப்போகிறார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios