வாக்கிய பஞ்சாங்கம் படி மே 26, 2026 அன்று குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடம்பெயர்கிறார். 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் மற்றும் பரிகாரங்கள் பற்றி இங்கு காணலாம்.
சுக ஸ்தானத்தில் குரு பெயர்ச்சியால் சுகபோகங்கள் கூடும், புதிய வாகனம், வீடு வாங்கும் யோகம் உண்டு.பரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.
தைரிய ஸ்தானத்தில் குரு பெயர்ச்சியால் தைரியம் கூடும், இளைய சகோதரர்களால் நன்மை உண்டாகும். பரிகாரம்: வியாழக்கிழமைகளில் பசு மாட்டிற்கு கொண்டைக்கடலை அல்லது அகத்திகீரை வழங்குங்கள்.
தன ஸ்தானத்தில் நடக்கும் குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் மகிழ்ச்சி, பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும்.பரிகாரம்: ஏழை மாணவர்களின் கல்விச் செலவிற்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள்.
ஜென்ம ராசியில் குரு உச்சம் பெறுவதால் அரசு வேலை, பதவி உயர்வு, கௌரவம் தேடி வரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.பரிகாரம்: சிவன் கோவிலில் உள்ள குரு பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
சுபச் செலவுகள் அதிகரிக்கும் (வீடு கட்டுதல், திருமணம்), ஆன்மீகப் பயணங்கள் கைகூடும். பரிகாரம்: வியாழக்கிழமைகளில் முதியோர் இல்லங்களுக்கு அன்னதானம் வழங்குவது நல்லது.
எடுத்த காரியத்தில் வெற்றி, மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது சிறந்தது.
கர்ம ஸ்தானத்தில் நடக்கும் குரு பெயர்ச்சியால் தொழில் மாற்றம் அல்லது பதவி உயர்வு, பணிச்சுமை குறையும்.பரிகாரம்: ஏழை மாணவர்களின் கல்விக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
பாக்கிய குருவால் அதிர்ஷ்டம் தேடி வரும், தந்தை வழியில் சொத்துக்கள் கிடைக்கும்.பரிகாரம்: வியாழக்கிழமைகளில் ஆலங்குடி அல்லது திருச்செந்தூர் முருகனை மனதார நினைத்து வழிபடுங்கள்.
அஷ்டம குருவால் மறைமுக லாபம் உண்டாகும், எடுக்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபடுவது நல்லது.
7-ம் இடத்து களத்திர குருவால் நீண்ட நாள் திருமணத் தடைகள் நீங்கும், கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் (துணி) சாற்றி வழிபடுங்கள்.
6-ம் இடத்து குருவால் கடன் படிப்படியாகக் குறையும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி, எதிரிகளை வெல்லும் வலிமை கிடைக்கும்.
பரிகாரம்: குரு பகவானுக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.
பூர்வ புண்ணிய ஸ்திர குருவால் புத்திர பாக்கியம், பூர்வீக சொத்துக்களில் லாபம் கிடைக்கும்.பரிகாரம்: வியாழக்கிழமைகளில் ஏழைகளுக்கு ஆடைகள் அல்லது இனிப்புகளைத் தானமாக வழங்குங்கள்.
Vastu Tips: வீட்டில் பணம் குவிய வேண்டுமா? 5 வாஸ்து டிப்ஸ் இதோ!
Home Temple Vastu: பூஜை அறையில் இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்! இதோ வாஸ்து ரகசியங்கள்!
வீட்டில் கடிகாரம் எங்கே மாட்டுவது? தவறான திசையில் மாட்டினால் என்னவாகும்?
உங்கள் குழந்தை போனை விடாம இருக்காங்களா? இந்த வாஸ்து மாற்றம் பண்ணுங்க