"இது வேற லெவல் டெடிகேஷன்".. பிதாமகன் விக்ரம் லுக்கில் அருண் விஜய் - வெளியானது பாலாவின் "வணங்கான்" டீசர்!
Arun Vijay Vanangaan Teaser : முதல் முறையாக பிரபல நடிகர் அருண் விஜய், இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் இணைந்துள்ள படம் தான் வணங்கான். அந்த படத்தின் டீசர் இப்பொது வெளியாகியுள்ளது.
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகத் துவங்கிய திரைப்படம் தான் "வணங்கான்". சில ஆண்டுகளுக்கு முன்பே சூர்யாவை வைத்து இந்த பட பணிகள் துவங்கிய நிலையில், ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் சூர்யா இந்த திரைப்படத்தில் இருந்து விலகினார்.
இதனை அடுத்து இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக அருண் விஜய் களமிறங்கி நடிக்க துவங்கினார். பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ள நிலையில், முற்றிலும் மாறுபட்ட ஒரு வேடத்தில் நடிகர் அருண் விஜய் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்று தான் கூறவேண்டும்.
இந்த திரைப்படத்தில் முதல் முறையாக பிரபல இயக்குனர் மிஷ்கின் அவர்கள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நிச்சயம் இது அருண் விஜயின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய மையில் கல்லாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.