Video : நகராட்சி கூட்டத்தில் அத்துமீறி தகராறில் ஈடுபட்ட பாஜகவினர்.. வைரல் வீடியோ!

ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சியில் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது முன் அனுமதியின்றி பாஜகவினர் கொடியுடன் அத்துமீறி நுழைந்த கோஷமிட்டனர். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

First Published Sep 23, 2022, 8:29 PM IST | Last Updated Sep 23, 2022, 8:29 PM IST

ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது,  அப்போது எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி பாஜகவின் நகர செயலாளர் நந்தகுமார் என்பவர் தலைமையில் 20 பேர் கையில் கொடிகளை ஏந்திக்கொண்டு நகர் மன்ற கூட்டத்தை நடத்த விடாமல் செய்யும் வகையில் சொத்து வரி உயர்வை திரும்பப் பெறக் கோரி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

மேலும் நகர மன்ற தலைவர் மற்றும் ஆணையாளர் உள்ளிட்ட நபர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும், மேலும் தேசிய கீதம் பாடப்பட்ட பொழுது, அவமதிக்கும் வகையில் கோஷம் எழுப்பியுள்ளனர், எனவே இத்தகைய செயல்களில் ஈடுபட்ட பாஜகவினர் மீது  உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி பவானி காவல் நிலையத்தில் நகராட்சி ஆணையாளர் தாமரை புகார் மனு அளித்துள்ளார். தொடர்ந்து புகாரைப் பெற்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.